அண்ணமார் கோவில்- வேணுகோபாலர் கோவில்

இவ்வாலயமானது முந்நூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட ஆலயமாக திகழ்கின்றது. யாழ்ப்பாண தமிழ் மன்னர் காலத்தில் இணுவில் பகுதியை ஆண்ட கைலாச நாதன் (இளந்தாரி) என்பவனது மெய்காப்பாளராக விளங்கியவர் அண்ணமார். இளந்தாரி வானுலகம் சென்ற புளியமரத்தின் அருகிலே உள்ள ஆலமரத்திலேயே ஏறி வானுலகம் சென்றார் என செவிவழிச்சான்றும் பஞ்சவர்ணதூதும் செப்புகின்றன. வருடாவருடம் இளந்தாரிகோயில் பொங்கலுடன் அண்ணமாருக்கும் படையல் செய்து வழிபாடு செய்வது வழக்கம். அண்ணமாரினை வழிபாடு செய்பவர்கள் வருடாந்தப் பொங்கல் செய்து பலகாரங்கள், பழங்கள், அசைவக்கறிகள் என்பனவும் படைத்து வழிபாடு செய்வார்கள்.

1998 ஆம் ஆண்டு இவ்வாலமர மேற்கு திசையில் 15 யார் தொலைவில் ஆலமரம் தலவிருட்சமாக வரும் நிலையில் அழகியதோர் கோயில் அமைத்து கருவறையில் வேணுகோபாலரை வைத்து கும்பாபிஷேகம் யெ;து வருடா வருடம் 15 நாட்கள் அலங்கார உற்சவம் இடம்பெற்று வருகின்றன. 14 ம் நாள் தேர் உற்சவமும்  15 ஆம் நாள் தீர்த்த உற்சவமும் நடைபெற்று வருகின்றன. மாலை நிகழ்வுகளாக சொற்பொழிவும் அதன் பயனாக சைவசமயப் போட்டியும் நடைபெற்று பரிசில்களும் வழங்கப்பட்டு வருகின்றன. 16 ஆம் நாள் வேணுகோபாலருக்கு திருக்கல்யாணமும் நடைபெறும். மகேஸ்வரபூசையும் இடம்பெறும். இவ்வாலயத்தில் இருநேரப்பூசைகள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345