அயத்து போனன்..
பூட்டாச்சி இதை அடிக்கடி சொல்லுவா. அப்ப நான் பத்தாம் வகுப்பு படிச்சு கொண்டிருக்கேக்க பூட்டாச்சி சொல்லி விடுவா
”மோனே அயத்துப் போகாம வெத்தில வாங்கி கொண்டு வா”
எண்டு. அப்ப எனக்கு விளங்க மாட்டுது. பிறகு எனக்கு விளங்மாப் போல சொல்லுவா ”மறக்காமல் ” வாங்கி வரச் சொல்லி. இப்பிடி எத்தனை தமிழ் சொல்லுகள் இண்டைக்கு மறந்து போச்சு. இந்தச் சொல்லை சொல்லேக்க ஏதோ பழைய ஞாபகம் மனதை இதமாக வருடுகிறது.
அடுத்த சொல்லோட தொடருவன்…….
இதுவும் ஆச்சி சொல்வதுதான். ”உண்ணாணை, அதை நான் அயத்துத் துலைஞ்சு போனன்”. அதாவது ‘அதை மறந்துவிட்டேன்’.
From where ‘அயத்து’ word came?
ஆரம்பம் எனக்கு தெரியவில்லை ஆனால் பூட்டாச்சி இதை அடிக்கடி சொல்லுறவா