அரிவாள்

சமையற்கட்டுடன் நெருங்கிய உபகரணங்களில் இந்த அரிவாளும் ஒன்று. நகரப்புறங்களில் கத்தி, மேசைக்கத்தி என்பன பாவிக்கப்படும் அதே வேளை கிராமப்புறங்களில் இவ்வரிவாள் பாவிக்கப்படுகிறது. இருக்கைப் பலகையுடன் கூடிய இதன் பாவனை காய்கறிகள், மீன், இறைச்சி என்பவற்றை வசதியாக வெட்டுவதற்கேற்ப அமைக்கப்பட்டுள்ளது. முக்கியமாக பனை நொங்கைக் குடித்த பின் பனங்காயைச் சீவுவதற்கும் பாவிக்கப்படுகின்றது. சீவிய பனங்காய் துண்டுகள் கால்நடைகளின் விருப்பத்திற்குரியதும், போசாக்கானதுமான உணவாகப் பயன்படுகிறது.

Sharing is caring!

Add your review

12345