அருட்கவி சி.விநாசித்தம்பிப்புலவர்

உலகறிந்த அருளாளரும், கவிஞருமான இவர் அளவெட்டியில் வாழ்ந்து கொண்டு, தனது அறிவையும், அருளையும் வழங்கி மக்களை வாழவைத்துக் கொண்டிருக்கிறார்.

இவரது பாடல்கள் எவருக்கும் விளங்கத்தக்க இலகுவான அருள்வார்த்தைகளாலானவை, அதேவேளை ஆழமான தத்துவக் கருத்துகள் புதுமைநயம் மிளிரவைக்கும் பாணியில் அமைந்தவை. பல்லாயிரகணக்கான பல்வகைப் பாடல்களைப் ஆக்கியுள்ள இவரது நூல்கள் பல வெளிவந்துள்ளன. அண்மையில் வெளிவந்த “கந்தபுராண வசனகாவியம்” (2000) எனும் நூல் இவரது தனித்துவத்திற்கு எடுத்துக்காட்டாகும். வசனநடை, சுவையான கவிதை நடையாகவே அமைவது இவருக்கேயுரிய சிறப்பியல்பு எனலாம்.

வள்ளிநாயகன் (1983) செல்வச்சந்நிதி கந்தன் திருக்காமாலை, அருண்மலர்மாலை (1983), கூட்டுபிரார்த்தனைப் பாடல்கள் (1998)

முதலான நூல்களுக்கு இவர் ஆசிரியராவார். இவரது அறிவுத்திறன் சமய, சமூகவேலைகளினுடாக மக்களுக்குப் பயன்தருவது போற்றுதலுக்குரியதாகும்.

Sharing is caring!

Add your review

12345