அருள்மிகு ஸ்ரீ காளி தேவி ஆலயம் இடைக்காடு

இவ் ஆலயம் 1835ஆம் ஆண்டளவில் தம்ப ர்நல்லதம்பிச் சாத்திரியராலும் அவர் மனைவி வல்லாத்தையாலும் சத்திரங்காய் எனும் இடத்தில் தாபிக்கப்பட்டதென அறியக்கிடக்கின்றது.  இவர்களைத் தொடர்ந்து இவர்களின் சந்ததியினரான சி. ஆறுமுகம், ஆ. சின்னப்பு, ச. நல்லதம்பி ஆகியோரால் பூசிக்கப்பட்டுத் தற்சமயம் சி. சத்தியமூர்த்தியால் பரிபாலிக்கப்பட்டு வருகின்றது.  இக்கோயில் புனரமைக்கப்பட்டு 1960ம் ஆண்டு ஆனி உத்தரத்தன்று மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதுவே இக்கோயிலின் வருடாந்த அபிஷேக தினமாகும்.

இக்கோவிலின் ஸ்தாபகர் சோதிடத்தில் வல்லுநர் கடிகாரமில்லாத அக்காலத்தில் சரியான நேரத்தை அறிந்து சாதகத்தை கணிக்கக்கூடியவர்.  பகலில் நிழலை காலடியால் அளந்தும், இரவில் நட்சத்திரங்கள் மூலமும், வெட்டிய வாழைக்குருத்தின் வளர்ச்சியைக் கொண்டும் நேரத்தைத் துல்லியமாகக் கணிக்கக்கூடிய திறன்பெற்றவர்.  இவரின் திறமையை பரிசோதிக்க எண்ணிய ஒருவர் தன் வீட்டில் நிகழ்ந்த பிறப்பு நிகழ்ச்சியின்போது தன் நிழலைக்கால் அடியால் அளந்த தொகையை நல்லதம்பிச் சாத்திரியாரிடம் கூறி. பிறந்த பிள்ளையின் சாதகத்தைக் கணித்துத்தரும்படி கேட்டார்.  அப்பொழுது தன் தோட்டத்தில் புல் பிடுங்கிக் கொண்டிருந்த சாத்திரியார் உடன் ஒரு குச்சியை எடுத்து நிலத்தில் எழுதிச் சாதகத்தைக் கணித்தார்.  அதன்பின் அவர் கூறியதாவது “எமது ஊர் எல்லைக்குள் இவ்வுயிரின் ஜனன நேரத்தில் மானிடப் பிறப்புக்கு எதுவித சாத்தியமும் இல்லை இந் நேரத்தில் நாலு கால் மிருகம் பிறப்பதற்குச் சாத்தியக்கூறு உண்டு என்றார்,  இவரின் சோதிடத்திற்கமையச் சோதிக்க வந்தவர் அவரின் காலடியில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி கேட்டார்.  அந்த நேரத்தில் தன்வீட்டில் ஒரு ஆடு குட்டி ஈன்றதெனக் கூறினார்.  இக்காலத்தில் நவீன விஞ்ஞான உபகரணங்களின் உதவியுடன் சாதகத்தைக் கணித்து பலன்சொல்லும் சோதிடர்களிடம் பிறந்த பிள்ளை ஆணா? பெண்ணா? என்று கேட்டு அறியமுடியாதிருக்கும் நாமெங்கே? எதுவித வசதிகளும் இல்லாமல் நேரமறியக் கடிகாரம், பஞ்சாங்கம், கொப்பி, பேனை எதுவுமில்லாமல் நிலத்தில் தடியால் எழுதிக் கணித்துச் சரியாகப் பலன்கூறும் அக்காலச் சோதிடர்கள் எங்கே? பூசகர்கள் எங்கே? இவர்கள் சாதாரண மானிடர்களல்லர்.  இறையருள் பெற்ற மகாத்மாக்களே.

—-நன்றி—–
1.திரு. க. அருணாசலம் – இடைக்காடு
2.திரு. வை. தம்பு – இடைக்காடு
3.திரு. வே. சுவாமிநாதன் – இடைக்காடு
4.திருமதி. பொ. மகாதேவா – இடைக்காடு

Sharing is caring!

2 reviews on “அருள்மிகு ஸ்ரீ காளி தேவி ஆலயம் இடைக்காடு”

  1. Bala Arun says:

    can you forward your personal id to me to discuss more abouth our village?

Add your review

12345