அலுக்கை நாவலடி ஞான வைரவர் ஆலயம்

இந்த ஆலயம் இலங்கையின் வட பாகத்தே அளவெட்டி எனும் வட்டாரத்தின் நாவலடியின் கீழ் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னர் காவல் தெய்வமாக பரமர், என்பவராலும் அவர் மகன் அருணாசலம் என்பவராலும் பூசிக்கப்பட்டதுதான் இந்த அலுக்கை நாவலடி ஞான வைரவர் ஆலயம். பின்னர் அருணாசலத்தின் வழித்தோன்றல்களாலும் வேலுப்பிள்ளை, சின்னப்பு, என்பவராலும் இவரது சுற்றத்தினராலும் பொங்கல், பூசைகள் செய்து வழிபட்டு சிறப்புற்றது. இவ் ஆலயமானது தவத்திரு வடிவேல் சுவாமிகள், தவத்திரு நயினாதீவுச் சுவாமிகள், தவத்திரு செல்லப்பா சுவாமிகள் என்பவர்களால் பக்திப் பாடல்களும், கூட்டுப்பிராத்தனைகளும் செய்து வழிபடப்பட்டது.
தொடர்ந்து வந்த 1980-1990 காலப்பகுதிகளில் திருவாளர் நா. சிவலிங்கம் அவர்களால் பொங்கல்களும் நித்திய பூசைகளும் நடைபெற்று வந்தது. பின்னர் 1990ம் ஆண்டளவில் ஆலயமானது ஆகம முறைப்படி மூலஸ்தானம் அமைக்கும் பணி திட்டமிடப்பட்டிருந்த போதும் பல வித இன்னல்களால் தடைப்பட்டு நா. சிவலிங்கம் அவர்களின தளராத ஊக்கத்துடனும் விடா முயற்சியுடனும் ஊர் மக்களின் ஏகோபித்த உழைப்பு, உதவியினாலும் 1995ம் ஆண்டளவில் ஆலய கட்டுமானப்பணி நிறைவுற்று மகா கும்பாபிஷேகம் சிறப்புற நடைபெற்றது. தற்போது இவ்வாலயத்தின் தல விருட்சமாக நாவல் மரத்திலிருந்து உற்பத்தியான ஆலமரம் உள்ளது. பின்னர் கடந்த போர்ச் சூழலின் பின்னர் 2010ம் ஆண்டு ஆலயம் முழுமையாக புனருத்தானம் செய்யப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. விசேடமாக இந்த ஆலயத்தில் செவ்வாய் கிழமைகளில் பொங்கல், பஜனை மற்றும் பௌர்ணமி தனங்களில் அன்னதானம் என்பவை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345