அலென் ஆபிரகாம் அம்பலவாணர்

அம்பலவாணர்

அலென் ஆபிரகாம் அம்பலவாணர் அவர்கள் 1885 யாழ் மாவட்டத்தில் உள்ள காரைதீவு தற்போதைய காரைநகரில் கந்தப்பர் சுப்பிரமணியம் பார்வதி அம்மையாருக்கு மகனாக பிறந்தார். இவருக்கு இரண்டு சகோதரர்களும் ஒரு சகோதரியும் உண்டு. அக்காலத்தில் ஏற்பட்ட விஷபேதியினால் தாய் தந்தையரை பறிகொடுத்தததை தொடர்ந்து சிறிய தந்தையான சரவணமுத்துவுடன் வளர்ந்தார். தனது ஆரம்ப கல்வியினை திருமதி சேது நாகமுத்துவிடம் கற்றார். பின்பு கார்திகேசு ஐயரிடம் உயர் இலக்கணம், இலக்கியம் போன்றவற்றினை கற்றுத் தேர்ந்தார். அக்காலத்தில் தெல்லிப்பளையில் இயங்கிய நன்கொடை பெறும் ஆசிரியர் கல்லூரியில் இணைந்து ஆசிரியப் பயிற்சி பெற்றதுடன் கத்தோலிக்க மதத்தினையும் தழுவிக்கொண்டார். சிறிதுகாலம் தான் கல்விகற்ற ஆசிரியர் கலாசலையில் விரிவுரையாளராக கடமையாற்றினார். சிறுவயதில் இருந்தே கணித அறிவும் அதனூடான வானசாஸ்திர அறிவும் கைவரப் பெற்றவராக விளங்கினார். இதன் பயனாக நீண்டகாலம் யாழ்பாணக் கல்லூரியின் கணித ஆசான திகழ்ந்தார். இதனை விட சென்னை மட்றிக்குளேசன் மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் எம்.ஏ படிப்புக்களை கற்று சிறப்புத் தேர்ச்சியடைந்தார். இவரின் மிகப்பெரிய சாதனை 1910 இல் தோன்றிய வால்வெள்ளி எத்தனை மணிக்கு தோன்றும் என்பதை மிகவும் துல்லியமாக கணிப்பிட்டு எல்லோரையும் ஆச்சரியத்திற்கு உட்படுத்தியமையேயாகும். (மே 19, 9.00 காலை-10.). இதனை கௌரவிக்கும்முகமாக இங்கிலாந்தின் வேத்தவை Fellow of the Royal Astronomical Society என்ற பட்டத்தினை வழங்கியது. இது தற்போதும் யாழ்பாணக் கல்லூரியில் காணப்படுகிறது. அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் வெளிவந்த மிஸலனி, உதயதாரகை போன்றவற்றில் வானசாஸ்திரம் பற்றிய பல கட்டுரைகளை இவர் வெளியிட்டார். வானசாஸ்திரத்துடன் மட்டும் தன்னை மட்டுப்படுத்தாமல் இலக்கியத்துறையிலும் பேராவல் கொண்டவராக இவர் விளங்கினார். இவரால் இயற்றப்பட்ட 8 பாடல்கள் தற்போதும் தென்னிந்திய திருச்சபையின் புத்தகத்தில் உள்ளது. காரைநகரில் இயங்கிய மதுவிலக்கு சபையின் அங்கத்தவராக தொழிற்பட்டு பல மதுக்கடைகளை மூடினார். இதனைவிட தாழ்த்தப்பட்டவர்களுக்கு ஒரு நன்னீர் கிணறும் இவரின் முயற்சியால் உருவாக்கப்பட்டது. தையல் தொழிலாளர்களின் சம்பள முரண்பாடுகளையும் அவர்களிற்கு ஏற்படும் இடர்களை தீர்க்கும் முகமாகவும் வடமாகாண தையல் தொழிலாளர் ஐக்கிய முன்னணி அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது. இதன் தலைவர் ஏ.ஏ.சலீம், தனாதிகாரி எம்.எச் நிசார் இது முழுக்க முழுக்க முஸ்லீம் மக்களை கொண்ட அமைப்பு என்பது குறிப்பிடக்கூடியது.

Sharing is caring!

Add your review

12345