அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை
அல்லாரை தமிழ் கலவன் பாடசாலை ஆனது யாழ் மாவட்டத்தில் தென்மராட்சி பிரதேச செயலர் பிரிவில் உள்ள கிராமங்களில் அல்லாரை ஒரு சிறிய கிராமமாக 20ஆம் நூற்றாண்டின் ஆரம்பகாலத்தில் வளர்ச்சியடைந்து வந்தது. 1930ஆம் ஆண்டிற்கு முன்னர் அல்லாரை, மீசாலை கிழக்கு , வெள்ளாம் போக்கட்டி, கச்சாய் ஆகிய பகுதிகளுக்குப் பொதுவாகக் கச்சாய்க்கிராமத்தில் ஒரு அமெரிக்கன் மிசன் பாடசாலை இயங்கி வந்தது. சைவப் பிள்ளைகள் கல்வி கற்பதற்கும் சமய அறிவைப்பெறுவதற்கும் எதுவித வசதியும் இருக்கவில்லை.
எனவே இங்குள்ள சிறார்களின் கல்வி விருத்தியடைய வேண்டுமென்ற உயர்ந்த நோக்குடன் அல்லரையை சேர்ந்த எஸ் .கே. செல்லையா அவர்கள் உயர் அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு பெரு முயற்சி எடுத்தார். எஸ் .கே. செல்லையா அவர்கள் ஒரு பயிற்றப்பட்ட ஆங்கில ஆசிரியர் அத்துடன் அல்லாரையில் புகழ் பூத்த அனைவராலும் போற்றப்படுகின்ற உதவி வழங்குகின்ற ஊர்ப் பெருமகனாகவும் திகழ்ந்தார்.
இரண்டாவது அதிபராக 1936 ஆம் ஆண்டில் திரு. நல்லதம்பி பாடசாலை பொறுப்பை ஏற்றார். இவர் பணிபுரியும் காலத்தில் மதியபோசனம் வழங்கப்பட்டது. இதனால் மாணவர் தொகையும் அதிகரிக்கத் தொடங்கியது. எனவே இதற்கு பக்கபலமாக 50 அடிக் கட்டடம் பழைய கட்டடத்துடன் இணைத்து L வடிவில் அமைக்கப்பட்டது. அத்துடன் திரு. கந்தப்பு என்னும் உதவி ஆசிரியர் ஒருவர் நியமிக்கப்பட்டார். இவர் கரவெட்டியை பிறப்பிடமாகக்கொண்டவர்.
1938 ஆம் ஆண்டில் தரம் 5 வரை வகுப்புக்கள் நடைபெற்றன. இதே காலத்தில் தரம் 5 பொதுப்பரீட்சையும் நடைபெற்றது. தொடர்ந்த வருடங்களில் தரம் 7 வரை வகுப்புக்கள் நடைபெற்றன. இக்காலப்பகுதியில் கிணறும் கட்டப்பட்டது.
திரு. குமாரவேலு அதிபரின் காலத்தில் மாணவர் தொகை அதிகடித்தது. இதனால் ஆசிரியர்களின் எண்ணிக்ககையும் அதிகடித்தது. இவருக்கு அடுத்ததாக மிருசுவிலைப் பிறப்பிடமாகக் கொண்ட திரு. சுவாமிப்பிள்ளை என்பவர் அதிபராகக் கடமையாற்றினார். இவரின் காலத்தில் பாடசாலை குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டது.
இவரை தொடர்ந்து ஆறாவது அதிபராக எஸ்.பி. சுவாமிநாதன் அதிபராகக் கடமையாற்றினார். இவரின் காலத்தில் மீசாலையை சேர்ந்த ஆசிரியர்களும் கடமையாற்றினார்கள். பாடசாலை முன்னேற்றமடைந்தது. திருமதி. பூரணம் பஞ்சாச்சரம் ஆசிரியர் குறிப்பிடத்தக்கவர். இவரின் காலத்தில் L வடிவமாக இருந்த கட்டடம் T வடிவமாக 50 அடி நீளத்துக்கு அமைக்கப்பட்டது.
இவரை தொடர்ந்து ஏழாவது அதிபராக கோப்பாயைச் சேர்ந்த திரு. சுப்பிரமணியம் என்பவர் அதிபராக நியமிக்கப்பட்டார். இவரது காலத்திலும் பாடசாலை முன்னேற்றம் கண்டது.
பதின்மூன்றாவது அதிபராக மீசாலையைச் சேர்ந்த திரு. அருளானந்தம் அதிபராக நியமனம் பெற்று பாடசாலையை சிறந்த முறையில் முன்னேற்றினார். இவர் எஸ்.பி. சுவாமிநாதன் அவர்களின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரை தொடர்ந்து பதின்நான்காவது அதிபராக கச்சாயை சேர்ந்த செல்வி. திரவியநாயகம் வேலுப்பிள்ளை பாடசாலை அதிபராக நியமனம் பெற்று 2000 ஆம் ஆண்டு யூலை மாதம் வரை சேவையாற்றினார். இவரை தொடர்ந்து திரு. சே. சிவபாதசுந்தரம் பாடசாலை இடம்பெயர்ந்திருந்த காலத்தில் அதிபர் பொறுப்பையேற்று நடத்தினார்.
2001 செப்ரெம்பரில் இருந்து திருமதி. சி. ஜெயக்குமார் பாடசாலை அதிபராக கடமையாற்றினார்.
2010 ஜனவரி முதல் தற்போது வரை திருமதி. க. யோகநாதன் பாடசாலை அதிபர் பொறுப்பையேற்று நடாத்தி வருகிறார்.
பாடசாலைக்கீதம்
இராகம்: ஹம்சத்வனி தாளம் :ஆதி தாளம்
பல்லவி
அல்லாரை அரசினர் வித்தியாலயம் பாரீர்
எல்லோரும் இதனை முன்னேரிற்ற வாரீர்
(அல்லாரை)
அனுபல்லவி
செல்லையா ஆசிரியர் உவந்தளித்திட்ட
நல்லதோர் காணியில் அமைந்த ஆலயமே
(அல்லாரை)
சரணம்
திருமகள் கலைமகள் மலைமகள் அருளால்
பொருள் வளம் கல்வி வீரம் பெற்று
அருள்வழி நின்று அறந்தனைக் காத்து
வரும் மாணவர்கள் மாண்புடன் வாழ்க
(அல்லாரை)
மாணவர் கல்வி அதில் முன்னேற்றம்
காணத் துடிக்கும் ஆசிரியர்கள்
பேணும் நலன்கள் யாவையும் பெற்று
வீணற வாழ்க வாழ்க எந்நாளுமே
தொடர்புடைய ஆக்கங்கள்
- சண்முகநாதன் மகா வித்தியாலயம்
- ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி
- சுப்பிரமணிய மகளிர் மகா வித்தியாலயம்
- அளவெட்டி அருணோதயக் கல்லூரி
- புங்குடுதீவு சித்திவிநாயகர் மகா வித்தியாலயம்
- உரும்பிராய் இந்துக் கல்லூரி
- குப்பிழான் விக்கினேஸ்வரா மகா வித்தியாலயம்
- றோமன் கத்தோலிக்க பாடசாலை
- சைவத்தமிழ் வித்தியாலயம்
- சந்திரோதய வித்தியாசாலை
- கொக்குவில் இந்து ஆரம்ப பாடசாலை
- கொக்குவில் CCTM பாடசாலை
- கொக்குவில் நாமகள் வித்தியாசாலை
- வேலணை மத்திய கல்லூரி
- சீனன்கலட்டி ஞானோதயா வித்தியாசாலை
- யா/அளவெட்டி அருணாசலம் வித்தியாலயம்
- குரும்பசிட்டி பொன்பரமானந்தர் மகாவித்தியாலயம்
- யா/விக்ரோறியா கல்லூரி
- நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம்
- நயினாதீவு மகா வித்தியாலயம்
- மானிப்பாய் கிறீன் ஞாபகார்த்த ஆங்கில பாடசாலை
- கொடிகாமம் திருநாவுக்கரசு மகாவித்தியாலயம்
- மருதனார் மடம் இறையியற் கல்லூரி
- வேலாயுதம் மகா வித்தியாலயம் – பருத்தித்துறை
- வடமராட்சி மத்திய மகளிர் கல்லூரி
- யா/புலோலி மெ.மி.த.க.பாடசாலை
- யா/மேலைப்புலோலி சைவப்பிரகாச வித்தியாலயம்
- சாவகச்சேரி மகளிர் கல்லூரி
- சாவகச்சேரி இந்துக் கல்லூரி
- காரைநகர் இந்துக் கல்லூரி
- இடைக்காடு மகா வித்தியாலயம்
- நெடுந்தீவு சைவப்பிரகாச வித்தியாலயம்
- அத்தியார் இந்துக்கல்லூரி
- இருதயக் கல்லூரி