அளவெட்டி சிந்தனைச் செல்வர் பொ.கைலாசபதி

அவர்கள் அறிவியல்மாணி(B.Sc) பட்டம் பெற்றவர். மெய்யியல் அறிஞராக விளங்கினார். தமிழிலும் சைவத்திலும் பேரறிஞராக விளங்கியவர் இலக்கிய கலாநிதி பண்டிதமணி சி.கணபதிப்பிள்ளை அவர்கள். இவர் திருநெல்வேலி சைவாசிரிய கலாசாலையில் தமிழ்பேராசிரியராக விளங்கினார். அங்கு சிந்தனைச்செல்வர் பொ. கைலாசபதி அவர்கள் உப அதிபராயிருந்தார். பண்டிதமணி இவரைத் தனது குருநாதர் என்கிறார். அவர் தமது சிந்தனைகளைப் பண்டிதமணி மூலம் பரவச்செய்தார். பண்டிதமணி அவரிடம் கற்றது பற்றிப் பின்வருமாறு கூறுகிறார்.

ஒரு நாள் (15-10-1940) மிக்க அச்சத்துடன் பேனையும் கையுமாய் குறிப்புப் புத்தகத்துடன் அந்த மகானை அணுகினேன். பாஷை இரண்டென்று தொடங்கி ஆரியமும் தமிழும் என்ற பாடம் நடந்தது. அவர் எனக்கு நடத்திய பாடம் ஆயிரத்திற்குக் குறையா. “உப அதிபர் ஆயிரம்” என்று ஒருவாறு ஒருபுத்தகம் தொகுக்கலாம் போலும்…. பெரும்பாலும் அவர் சிந்தனைகளை எட்டமுடியவில்லை. எல்லாவற்றையும் எழுதிக் கொண்டேன். அவர் தொடாத துறைகளே இல்லை.      -சிந்தனைக்களஞ்சியம் அளவெட்டி தந்த அறிவுச் செல்வம் 1978பக் 232-239.

பண்டிதமணி சிந்தனைச் செல்வர் கற்பித்தவற்றையெல்லாம் முடிந்தவரை எழுதிக்கொண்டார். இவற்றைப் பலருக்கும் படிக்கக் கொடுத்தார். பண்டிதமணி மறைந்தபின்னர் பேராசிரியர் சு. சுசீந்திரராசா திரு. சுபாரத்தினம் இருவரும் இவற்றை யாழ் பல்கலைக்கழக சார்பில் வெளியிட்டு அவரின் சிந்தனைகளுக்கு நிலைத்த வாழ்வைக் கொடுத்துள்ளனர். அவர்கள் பதிப்பித்த இந்த நூலுக்கு இலக்கிய கலாநிதி. பண்டிதர் மு. கந்தையா (பி.எ) விளக்கவுரை எழுதியுள்ளார்.

சிந்தனைச் செல்வர் பொ. கைலாசபதி 1902 இல் பிறந்தார். 2002 ஆம் ஆண்டு அவரது பிறந்த நூற்றாண்டு.

இவரின் அறிவாற்றலை வளர்க்க முதலில் காரணமாக விளங்கியவர் பன்னாலை சிவானந்தையர். இவரிடமே ஆங்கிலம். வடமொழி அறிவினை இளமையிலேயே பெற்றுக் கொண்டார்.

Sharing is caring!

Add your review

12345