அளவெட்டி சிறிசுக்கந்தராசா

கனடாத் தமிழ் எழுத்தாளர்களில் அளவெட்டி சிறிசுக்கந்தராசாவுக்கும் முக்கியமான ஓர் இடமுண்டு. கனடாவிலிருந்து வெளிவந்த நான்காவது பரிமாணம், தாயகம், செந்தாமரை மற்றும் தமிழர் மஞ்சரி போன்ற சஞ்சிகைகள் பத்திரிகைகளில் இவரது பல படைப்புகள் வெளிவந்துள்ளன. இவரது சிறுகதைத் தொகுதியான ‘சிறிசுவின் சில கதைகள்’ எஸ்.பொ.வின் மித்ர வெளியீடாகத் தமிழகத்திலிருந்து வெளிவந்துள்ளது.

அளவெட்டி சிறிசுக்கந்தராசாதமிழில் மட்டுமின்றி ஆங்கிலத்திலும் எழுதும் ஆற்றல் பெற்றவரான அளவெட்டி சிறிசுக்கந்தராசா மரபுகளைத் துணிச்சலுடன் தனக்கேயுரிய மொழி நடையில் தகர்ப்பதில் வல்லவர். இவரது கதைகளைப் பற்றி எழுத்தாளர் க.நவம் அவர்கள் “புகலிட வாழ்வின் வினோத ஆனுபவங்களை இடையிடையே ஊரின் காற்றை அங்கிருந்தும் சில வேளைகளில் இங்கிருந்தும் சுவாசிக்கும் கரிசனை மனவெளியிலும் மாய விசித்திரங்களிலும் மொய்க்கிற பிரமைகளின் பிரதிபலிப்பு என்கிற சூழ்முழுமை அம்சங்கள் யாவற்றையுமே தனக்குரிய மாறுபட்ட பாணியில் குழைத்து இவரால் அழகாக வரையப்பட்ட சித்திரங்கள்’  என்பார். அத்துடன் அரசியல் சூழல் காரணமாக புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களின் புலம்பெயர் அனுபவங்களை அனுகூலமாக்கிக் கொண்ட தமிழ்ப் படைப்பாளிகளில் அளவெட்டி சிறி முக்கியமான ஒருவர் என்றும் குறிப்பிடுவார்.

 By – Shutharsan.S

நன்றி – அளவெட்டி இணையம்

Sharing is caring!

Add your review

12345