அழகசுந்தர தேசிகர்

வாலிப மாநாட்டினரின் ஆண்டுக் கூட்டமொன்று சுன்னாகத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அங்கு இலக்கிய விரிவுரை ஆற்ற வந்த ஒருவர் திடீரென்று

‘நான் விரிவுரை ஆற்றப் போவதில்லை சூழ்நிலைக்குத் தக்கபடி அரசியலில் ஆனா, ஆவன்னா என்பதைப்பற்றி பேசப் போகிறேன்’ என்று கூறிவிட்டு ‘அறஞ் செய விரும்பு’ ‘ஆறுவது சினம்’ என்ற இருபெரும் பொருள்பற்றி அழகாகப் பேசி முடித்தார்.

ஆவர் யார் தெரியுமா? அவர்தான் தமிழ் வளர்த்த தாமோதரனாரின் திருக்குமாரரும் இலங்கைச் சர்வகலாசாலையின் தமிழ்ப் பேராசிரியருமாக இருந்த வண. பிரான்சிஸ் கிங்ஸ்பெரி என்ற அழகசுந்தர தேசிகர். பரந்த முகம் நரைத்த தாடி, ஆங்கில உடை, தூலித்த சரீரம், நகைச்சுவையை வாரி வழங்கும் வாய் இவைதாம் அவர்தம் புறத்தோற்றம். அவர் அகம் தூய்மையானது. சமரசபாவமுடையது. ஏந்த விசயத்தையும் ஆராய்ந்து தான் சரியெனக் கண்டதை துணிவுடன் கையாண்டவர் அவர். ‘யாம் ஜவேம்’ என்ற மொழிபெயர்ப்புப் பாடலின் நயமே தேசிகரைப் படம் பிடித்துக் காட்டும். இராமன் கதை, பாண்டவர் கதை, சந்திரகாசம், மனோன்மணி நாடகம் என அவர் எழுதிய நூல்கள் மாணவர்களுக்கு புது விருந்தாயமைந்தன. ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பதே தேசிகரின் இலட்சிமாயிருந்தது.

Sharing is caring!

Add your review

12345