அ.ந.கந்தசாமி

கவிஞரும் விமர்சகருமான அறிஞர் இ.முருகையன், அ.ந.கந்தசாமி பற்றிப் பின்வரும் வினாவை எழுப்பியுள்ளார்.
அ.ந.காந்தசாமியின் எதிர்காலச்சித்தன் பாடலைவிடக் கருத்தும் சிந்தனையும் பொதிந்த கவிதைகள் தமிழகத்தில் உள்ளனவா? இருந்தால் எடுத்துக் காட்டட்டும்” கற்பகம் 1:2,தை, மாசி 1977 முருகையனின் இந்த ஒரு வினாவே அ.ந.க.வின்ச் சிறப்புக்குச் சான்றாகும
அ.ந.க.வின் கவிதைகள் இதழ்களில் வெளியாகினவே தவிர வடிவம் பெறவில்லை. எனவே, விமர்சகர்கள் அவரது கவிதை ஆற்றலைச் சுட்டுவதில்லை. விமர்சகர் செ.யோகராசா அ.ந.கவின் சிறப்பைப் பின்வருமாறு உறுதி செய்கின்றார்
“ஈழத்து நவீன கவிதை மரபின் முன்னோடி சிலர் கூறுவது போன்று மகாகவி மட்டுமல்லர், வேறும் சிலருளர். அவர்களுள் மகாகவிக்குச் சற்று முற்பட்ட வேண்டிய தொன்றாகும். மல்லிகை. 88,11ஆம் ஆண்டு மலர் ஆகஸ்ட் 1975 ப.67” மறுமலர்ச்சிக் குழுவினருள் அ.ந.கந்தசாமி (கவந்திரன்), மஹாகவி (உருத்திர மூர்த்தி) சாரதா (இ.சரவணமுத்து) முதலியோர் விதந்துரைக்கத் தக்கவராவார்”
“கவிதை உள்ளடக்கத்தைப் பொறுத்த வரையிலும் சமுதாயச் சார்புடை கவிதைகளை பாடியரென்ற கவிதைகளை பாடியவரென்ற விதத்திலும் அடிப்படையில் முற்போக்குக் கவிதைகளைத் தொடக்கி வைத்தவரென்ற விதத்திலும் மகாகவியை விட ஒருபடி முன்னிற்கிறார் அ.ந.கந்தசாமி மேலும், பக் 67, 67”
முற்போக்குக் கவிதைகளை முதன் முதலிற் பாடியவர் கவீந்திரன். இருக்கருத்தை அவரே பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்.
சாதிக் கொள்கையை நையாண்டி செய்து நவாலிச் சோமசுந்தரணார் பாடிய “ஏறாதமேட்டுக்கு இரண்டு துலை இட்டிறைக்கும்” பேறாண கதையைப் பலருக்கும் நான்பாடிக் காட்டிவந்த காலமது.
இப்படிப்பட்ட உணர்ச்சி பொங்கும் என் மனதிலே வில்லூன்றிக் கொடுமை ஒரு பெரும் புயலே கிளம்பி விட்டது. அப்புயலைக் கவிதையாக்கினேன். ஈழத்திலே ஒரு கம்யூனிட் கட்சி கூட உருவாகாத அக்காலத்திலேயே (1940களில்) நான் தொழிலாளர் புரட்சி பற்றி  ஈழகேசரியில் கவிதைகள்  எழுதியிருக்கின்றேன்  என்று (மல்லிகை மார்ச் 1970)  அ.ந.க. குறிப்பிட்டுள்ளார் . இது அ.ந.க.வின் இலக்கியப்போக்கைத் தெளிவாகக் காட்டுகின்றது.
வில்லூன்றி மயானம், எதிர்காலச்சித்தன்  பாட்டு, துறவியும் குஷ்டரோகியும், சத்திய தரிசனம், சிந்தனையும் மின்னொளியும் ,தேயிலைத்தோட்டத்திலே முன்னேற்றச் சேனை, இரவு ,எல்லோருக்கும் எல்லாமும் முதலியன பலர் பாராட்டும் அ.ந.க.வின் கவிதைகள் ஆகம். முற்போக்கு எழுத்தாளர்களின் பிதாமகர் என்று போற்றப்படும்  அ.ந.க. சுதந்திரனில் 1950களில் பிரதம துணையாசிரியராக விளங்கினார்
சுதந்திரனின் பிரதம ஆசிரியராக இருந்த ஈழத் தந்தை செல்வநாயகம் சுதந்திரனைச் சிறப்பாக வெளியிட்டு வந்தமையைப் பாராட்டி தமிழருவி த.சண்முகசுந்தரருக்கு எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். சுதந்திரனைப் பல்வேறு புனைப்பெயர்களில் எழுதி வெளியிட்டார்.
அவர் தினகரன் இதழில் எழுதிய மனக்கண் என்ற நாவல் பெரிதும் பாராட்டுப் பெற்றதாகும் தொடர்ந்து நூவல்களை எழுதத் திட்டமிட்ட அவர் இறந்து விட்டதால் ஈழத்தமிழ் பல கதைகளை இழந்து விட்டது.
உலகப்புகழ் பெற்ற பிரெஞ்சு நாவலாசிரியர் எமிலிஜோலா. அவரது புகழ்பெற்ற நவீனங்களில் ஒன்று நூனா. ஆ. ந. க 1951 ஆம் ஆண்டில் சுதந்திரனில் “நூனா” நவீனத்தை மொழி பெயர்த்து வெளியிட்டார்.

Sharing is caring!

1 review on “அ.ந.கந்தசாமி”

Add your review

12345