அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன்

அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன்

யாழ்ப்பாண மாவட்டத்திலே அராலிப் பாலத்திலிருந்து தெற்கு நோக்கிக் கால்மைல் தூரத்தில், மேற்கு நோக்கிய வீதியில் ஆவரம்பிட்டியில் அமைந்துள்ள அவ்வம்மன் மலையாள் தேசத்திலிருந்து வந்ததாக ஐதீகம். இக்கோவிலின் வடக்கு வீதியில் அமைந்துள்ள நாவல் மரம் மிகப் பழமை வாய்ந்தது. அடுத்த வெள்ளி,  சனிக்கிழமைகளில் முடிவடையுமாறு உற்சவம் நடைபெறும். 9வது நாள் ஆடு கோழிகளைப் பலியிடும் வேள்வி இற்றைக்கு 60 ஆண்டுகளுக்கு முன் நடைமுறையில் இருந்தது. பின் நிறுத்தப்பட்டுவிட்டது. ஒவ்வொரு வருடமும் புதிய கமுகு மரத்தின் உச்சியில் நடுவே சிங்கம் வரையப்பட்ட வெள்ளைச்சீலையும்,  நான்கு நிறச்சேலைகளும் கட்டப்பட்டுத் திறந்த வெளி அரங்கில் கொடிமரம் ஏற்றப்படும். 8ம் நாள் சுவாமி வேட்டைக்குச் சென்று திரும்ப வைகறையாகிவிடும். அடுத்த நாள் பொங்கல் பூசைகள் நடைபெறும். இதற்குப் பின் சங்காபிஷேகமும் நடந்தேறும். அன்று பகல் அன்னதானம் வழங்கப்பட்டு மாலை பூந்தண்டிகையில் அம்பாள் வலம்வரும் காட்சி கண்கொள்ளாக் காட்சியாகும்.

அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன்அராலி கிராமத்தின் கிழக்குப் பக்க முகப்பில் காவல் தெய்வம் போன்று முதலில் அமைந்திருக்கும் திருக்கோயில் தான் அராலி ஆவரம்பிட்டி ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயமாகும்.

ஈழத்து வரலாற்றுப் புகழ்பெற்ற தலம், பழம் பெரும் சக்தி ஆலயங்களுள் இந்த ஆலயம் முதன்மை பெற்ற ஒன்றாகும். இங்கு அம்மாள் அருவத்திருமேனி கொண்டு அருள் ஒளி பரப்பி நிற்கும் தன்மை அதி உத்தமமானதும், அற்புதமானதும் ஆகும்.

எமது ஆலயம் பழமை வாய்ந்த மிகச் சில கருங்கல் ஆலயங்களில் முதன்மை பெற்று இருக்கின்றது. இவ்வாலயத்தின் தூபி வேலை வேறு எந்த ஆலயங்களிலும் இல்லாத முறையில் விசேடமாக அமைக்கப் பெற்று இருக்கின்றது.

 

By – Shutharsan.S

 

நன்றி – அராலி அம்மன் இணையம்

Sharing is caring!

Add your review

12345