இடிகுண்டு – இடைக்காடு

பல ஆண்டுகள் பழமையான இந்த இடிகுண்டு இடைக்காட்டு பிரதேசத்தில் உள்ளது. முன்னர் இடி ஒன்று விழுந்ததாகவும் இதனால் வற்றாத இக்கிணறு உருவானதாகவும் அறியக்கிடக்கிறது. கிட்டத்தட்ட ஒன்றரை அடி விட்டமும் மூன்று அடி நீளமும் உடையதாக உள்ளது. மேலும் சிறப்பாக ஒன்றரை அடி ஆழத்திலேயே நீர் கிடைக்கிறது. சவர் நிலப்பரப்பில் இருந்தாலும் இக்குண்டில் நல்ல நீர் கிடைக்கிறது. ஒரு ஆளை மூடக்கூடியளவு நீர் மட்டமும் உள்ளது. போதுவாக மேய்ச்சலுக்கு
செல்லும் கால்நடைகளுக்கு நீர் தாகத்தை தீர்ப்பதற்கு பாவிக்கிறார்கள். பாறைத் தொடராகவுள்ள இப்பிரதேசத்தில் பாறையில் உள்ள பள்ளம் நீர் தாங்கு தொட்டியாக பாவிக்கப்படுகிறது. இன்னுமொரு விடயம் யாதெனில் இந்த கிணறு மனித பாதம் போல அமைந்துள்ளதாகும். அதுவும் இடது பாதம் போல அமைந்துள்ளது. இக்கிணற்றிற்கு சற்று தூரத்தில் வலது கால் போல அமைந்துள்ள கிணறும் உள்ளது. இது தூர்வடைந்துள்ளது. இவ்வாறான சிறப்புடைய இக்கிணறுகளை தொல்லியலாளர்கள் ஆராட்சி செய்ய வேண்டும். அது மட்டுமல்லாமல் நம்மவர்களுக்கு தெரியப்படுத்துவதுடன் சுற்றுலா தளமாகவும் மாற்ற வேண்டும். இதே போன்ற வற்றா கிணறுகள் நவாலி இடிகுண்டு, நிலாவரை வற்றாக்கிணறு போன்றவையாகும்.

Sharing is caring!

Add your review

12345