இடைக்காடு ஸ்ரீ சோதி வைரவர் ஆலயம்

1925ம் ஆண்டளவில் ஆறுமுகம் குடும்பத்தினரால் அவர்களது காணியிலுள்ள வேப்பமரத்தடியில் திரிசூலம் வைத்து வணங்கப்பட்டு வந்தது.  அதன்பின் வீதி அருகாமையிலுள்ள வேப்பமரத்தின் கிழக்கு நோக்கிச் சென்ற கிளையை முகட்டு வளையாகப் பாவித்து ஓலைக்கொட்டில் அமைத்து அதில் திரிசூலத்தை வைத்து வழிபட்டு வந்தனர்.  1955ஆம் ஆண்டளவில் சீமேந்துக் கட்டடத்தில் மூலவரைப் பிரதிஷ்டை செய்து வைகாசி மாதம் அவிட்ட நட்சத்திரத்தில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.  இதுவே வருடாந்தப் பொங்கல் திருக்குளிர்த்தித் தினமாகும்.  இத்திருத்தலத்தின் அருகில் வசிப்பவர்கள் காலை, மாலை விளக்கேற்றி வழிபட்டு வருகின்றனர்.  விசேட தினங்களில் அந்தணர்களால் பூசை வழிபாடு செய்யப்பட்டு வருகின்றது.  1970ம் ஆண்டளவில் சிறிய மணி ஒன்று 15 அடி உயரமான தூணில் அமைக்கப்பட்டது.  அது 1990ம் ஆண்டில் இடப்பெயர்வின்போது காணாமல் போய் 1996ம் ஆண்டில் ஊர் மக்களது பங்களிப்பு மூலம் மீண்டும் மணி அமைக்கப்பட்டது.  வீதி ஓரத்தில் அமைந்துள்ள இவ்வாலயத்தை மேலும் விஸ்தரிப்பதற்காக கோவிலின் வடக்குப் பக்கத்தில் உள்ள திரு. தாமோதரம்பிள்ளையின் இரண்டு பரப்பு 5 குளி அளவு காணி சாசனமூலம் அறுதியாகப் பெறப்பட்டுள்ளது.  இக் காணியில் 1985ம் ஆண்டளவில் கிணறு வெட்டி கோவில் பாவனைக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது.  2005ம் ஆண்டு இக் காணியில் மடைப்பள்ளியும் மண்டபமும் கட்டுவதற்குரிய ஆயத்தங்கள்  மேற்கொள்ளப்பட்டன.  இதற்கான திருப்பணி நிதி கனடா, சுவிஸ் போன்ற வெளி நாடுகளில் உள்ள இக் கோவில் சுற்றாடலில் உள்ள பக்தர்களிடம் பெறப்பட்டுள்ளது.

—-நன்றி—–
1.திரு. க. அருணாசலம் – இடைக்காடு
2.திரு. வை. தம்பு – இடைக்காடு
3.திரு. வே. சுவாமிநாதன் – இடைக்காடு
4.திருமதி. பொ. மகாதேவா – இடைக்காடு

Sharing is caring!

Add your review

12345