இணுவில் கண்ணகா பரமேஸ்வரி ஆலயம்

இவ்வாலயம் இணுவில் மேற்கு வட்டுவினிக் குறிச்சியில் அமைந்துள்ளது. செல்லப்பா என்பவரால் அமைக்கப்பட்டது. இவ்வாலயத்தில் நித்திய நைமித்தியக் கிரியைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன. இப்பொழுது திரு. திருவிளங்கம் தர்மகர்த்தாவாக இருந்து ஆலயத்தை பரிபாலித்து வருகின்றார். 1985 ஆம் ஆண்டு மகாதேவக்குருக்களின் தலைமையில் நயினாதீவு பிரதமகுரு திரு.பரமேஸ்வரக்குருக்களால் கும்பாபிடேகம் இடம்பெற்றது. இக்கும்பாபிடேகத்தை தொடர்ந்து 12 தினம் திருவிழாக்கள் இடம்பெறுகின்றன. வுpசேட திருவிழாவாக சித்திரை வருடப்பிறப்பு, ஆடிச் செவ்வாய், வரலட்சுமி விரதம், நவராத்திரியும், திருவெம்பாவையும், விஷ்ணுவிற்குரிய ஏகாதசி விரதமும், இலட்ச அர்ச்சனை ஆவணி மாதத்தில் 10 தினங்கள் இடம்பெறும்

மகாதேவக்குருக்களாளேயே 1967 ஆம் ஆண்டளவிலேயே “தர்மசாஸ்தா குருகுலம்” எனும் வேத ஆகமப்பாடசாலையை நிறுவி அந்தணர்களிற்கு கல்வி போதிக்கப்பட்டது. வீணை வகுப்புக்களும், பண்ணிசை வகுப்புக்களும் நடாத்தப் படுகின்றன. பிரம்ம ஸ்ரீ வீரமணி ஐயராலேயே  இவ்வாலயத்திற்கு ஊஞ்சற் பாட்டும் இயற்றப்பட்டது.
1989 ஆம் ஆண்டு ச.வே. பஞ்சாட்சரம் அவர்களால் வட்டுவினி கண்ணகையம்மன் மீது பாடப்பெற்ற விண்ணப்ப வெண்பாக்கள் உள்ளிட்ட “அன்னை நாச்சிஅருள்மஞ்சரி” என்னும் நூலை தங்கம்மா அப்பாக்குட்டி, நமசிவப்பிரகாசம் ஆகியோர் சேர்ந்து வெளியிட்டனர். வீரமணி ஐயரினால் இயற்றப்பட்ட சௌந்தர்ய லகரி என்னும் சுலோகம் கீர்த்தனை வடிவிலே  பாடப்படுவது சிறப்பான அம்சமாகும்.

நன்றி : ம.சோமசுந்தர சர்மா.
சீர் இணுவைத் திருவூர்

Sharing is caring!

Add your review

12345