இணுவில் செல்லப்பா வைத்திய சாலை

இணுவில் கந்தாசாமி கோயிலின் வடகீழ் பகுதியில் அமரர் செல்லப்பாவினால் ஆரம்பிக்கப்பட்டது செல்லப்பா வைத்தியசாலை. செல்லப்பா அவர்கள் சிவநாச்சியை மணம் புரிந்தார். பெரிய சந்நியாசியவர்களின் ஆசிர் வாதம் இவரினையும்  இவரது வைத்திய சாலையையும் சிறப்படைய வைத்தது. இவர் சித்த மருத்துவத்தையும், நாடிபிடித்து பார்த்தல், திருவாக்கு சொல்லுதல் போன்றன இவருக்கு கைதேர்ந்த கலையாக அமைந்தது. அத்தடன் சோதிடம் பார்ப்பதனையும் தொழிலாக கொண்டார். துன்பப் பட்ட மக்களை(நோயால்) நாடிபிடித்துப் பார்த்து தகுந்த மருந்து கொடுத்துச் சுகமடையச் செய்தார்.

கைநாடி பிடித்துப் பார்ப்பதிலும் சிறந்த விளங்கிய இவர் யேசு நாதரின் பக்தர் ஒருவரின் இறப்பினை முற்கூட்டியே தெரியப்படுத்தி பரணி நட்சத்திரத்தில் படுத்த இவர் 96 ஆம் நாள்  இரவு 12 மணிக்கு இவர் யேசுவின் பாதம் அடைவார்  என்று கூறிய வாறு அவர் கூறிய மாதிரியே நடைபெற்றது. தனது இருபுத்திரர் களையும் பல காலம் வைத்தியத்தில் ஈடுபடுத்தி பல நுட்பங்களையும்  கைக் கொள்ள வைத்தார். இவருடைய முயற்சியால் இவரது புத்திரர் கந்தையா வைத்தியத்தில் ஈடுபட்டு தந்தையை விட புகழ் எய்தினார். சிறுபிள்ளை வைத்தியமும் மருத்தெண்ணை தயாரித்தலும் கைவந்த கலையாக விளங்கிற்று. அவர் நிறை குறைந்த பிள்ளை பற்றி எழுதிய அறிக்கை பற்றி  எட்வேட் அவர்கள் இவருடைய சித்த மருத்துவத்தின் மூலம் மாற்றியமைக்கலாம் என்று பாராட்டியுள்ளார். இலங்கையின் முதலாவது பிரதமர் இலங்கைக்கு வந்த போது வயிற்று வலி ஏற்பட்டது. அவர் யோகர் சுவாமியை நாட யோகர் இணுவில் செல்லப்பனிடம் சென்றால் குணமடையும் எனக் கூறியதற்கிணங்க அங்கு சென்று செல்லப்பாவின் மருந்திற்கு குணப்பட்டது. இதனால் இவரது புகழ் பரவியது.

நன்றி :
மேற் குறிப்பிட்ட தகவல் 11-11-2002 வலம்புரி நாளேட்டில் செ.பாலசுப்பிரமணியம் அவர்களால் கொடுக்கப்பட்டு வைத்தியர் கந்தையா அவர்களின் சிறப்புக்கட்டுரையாக வெளிவந்தன. அவற்றிலிருந்து தொகுக்கப்பட்ட  சில விடையங்களே.
சீர் இணுவைத்திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345