இணுவில் நடுவிழாத்தி வைரவர்(விநாயகர்) கோவில்

பல விளாத்தி மரங்கள் சூழப்பெற்ற நடுவிலே இவ்வாலயம் அமையப்பெற்றமையால் நடு விளாத்தி வைரவர் எனக்காரணப் பெயராயிற்று. வைரவப் பிள்ளை என்பவரது காணியில் உள்ள சாம்பல்பிட்டியில் 1975 ஆம் ஆண்டளவிலேயே  ஒரு கல்லினை வைத்து சமய வழிபாடு ஆற்றி வந்ததாகக் கூறுவர். அந்த வழிபாட்டுக் கல்லினை வேறு இடத்தில் வைத்து வழிபாடு ஆற்றுவதற்கு விரும்பிய குடும்பத்தினர் பக்கத்தில் நின்ற புளியமரத்தினை தறித்தனர். அதனால் அக்குடும்பத்தினர் அனைவருமே நோய்க்கு உட்பட்டனர். பெரிய சந்நியாசியின் வேண்டுகோளுக்கு இணங்க மீண்டும் இவ்வாலயம் பழைய இடத்திற்கே மீளமைப்பு செய்யப்பட்டது. அக்குடும்பமும் நோயிலிருந்து நீக்கம் அடைந்தனர். வேலுப்பிள்ளை சண்முகம் என்பவர் ஒரு கொட்டில்அமைத்து வழிபாடு ஆற்றிவந்தார். இவ்வாலய புணரமைப்புக்கு பின்பே அங்கு தோண்டப்பட்டிருந்த கிணறு ஒன்றில் நீர்சுரந்தது. இது இவ்வாலயப்புதுமை எனலாம். இவரினைத் தொடர்ந்து கணேசுவும் அதனைத் தொடர்ந்து கந்தசுவாமியும் பூசைப்பணியை நிறைவேற்றினர். ஆகமமுறைப்படி இவ்வாலயம் கற்பக்கிரகம், வசந்தமண்டபம், வெளிமண்டபம், மணிக்கோபுரம் என்பன அக்குடும்பத்தாரது ஒத்துழைப்புடனும் அயலவரது ஒத்துழைப்புடனும் அமைக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு தைமாத சதய நட்சத்திரத்திலே பாலஸ்தாபன கும்பாபிஷேகம் இடம்பெற்றது. விஷேச அபிஷேகம் தைமாத அத்த நட்சத்திரத்தில் இருந்து 48 நாட்கள் நடைபெறுகின்றன. ஆவணி அத்தத்தை தொடக்கமாக கொண்டு 10 தினம் அலங்கார உற்சவமும் பூரனையன்று தீர்த்த உற்சவமும் நடைபெற்று வருகின்றன. கற்;பக்கிரகம் முதல் வசந்தமண்டபம் வரை ஆறுமண்டபங்கள் தற்பொழுது அமைவு பெற்றுள்ளன. இவ்வாலயத்தில் மகாசிவராத்திரி, நவராத்திரி, திருவெம்பாவை, ஆகியவையும் விசேடமாக கொண்டாடப் படுகின்றன.

நன்றி: தகவல்-க.கந்தசாமி (நித்திய பூசகர்.)
மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345