இணுவில் மாணிக்கவைரவர் பத்திரகாளி அம்மன் கோயில்

கலிங்கராயனுடைய வரலாற்றுக்காலத்திலே அமைத்து வழிபடப் பெற்றது. இது சிவகாமி அம்மன் மேற்கு வீதியில் அமைவு பெற்றுள்ளது. இவ் வைரவர் காவல்த் தெய்வமாகவே வழிபடப் பெற்றார்.

வாசலில் நெடிய வில்வ மரமும் மேற்கு வீதியில் ஒரு வயது முதிர்ந்த வேப்பமரமும், தெற்குப் புறத்தே மாமரமும் இவ்வாலத்திற்கு அழகு சேர்க்கின்றன. சாத்திரம்மா என்பவர் வைரவரோடு, பத்திரகாளியையும் சேர்த்து வழிபாடாற்றினார்.
இவ்வம்மையாரே இவ்வாலயத்தை பெரியகட்டிடமாக கட்டி குடமுழுக்கும் செய்வித்தார். குடமுழுக்குக்கு முற்பட்ட காலத்தில் படையல் வழிபாடே இடம்பெற்றது.

இவ்வாலயத்தில் காலை, மாலை ஆகிய இரு நேரப் பூசைகளும் விஷேச பூசைகளாக வருடத்தில் இருமுறை 40 நாட்கள் தொடர்ந்து அபிஷேகமும், நவராத்திரி வாழை வெட்டும் சிறப்பாக நடைபெறுகின்றன. இரவு வேளைகளில் புராண படணமும் இடம்பெறும். இவ்வாலயம் சு. மாசிலாமணி, சு. செல்லத்துரை அவர்களின் கூட்டு பரிபாலனத்தினாலும் செல்லத்துரை அவர்களின் பின் அவரது சந்ததியினரது முயற்சியாலும் ஆலயத்திருப்பணிகள் சிறப்பாக இடம்பெறுவதனை  அவதானிக்க கூடியதாக உள்ளது.

நன்றி : மூ.சிவலிங்கம்.
சீர் இணுவைத் திருவூர்

Sharing is caring!

Add your review

12345