இணுவில்-ஸ்ரீ கௌரியம்பாள் ஆலயம்.

1950 ஆம் ஆண்டளவிலேயே முருகேசு மயில்வாகனம்  என்பவரால் அவருடைய நண்பன் வைத்தியர் சீவரத்தினம் அவர்களின் ஆலோசனைப்படி சிறிய ஆலயம் ஒன்றினை அமைத்து இரு சிலைகளை நிறுவி அம்பாளாகவும் வைரவராகவும் வழிபாடு ஆற்றி வந்தார். பெரிய உருவிலே காணப்பட்ட அம்பாளை நண்பரிடம் கொடுத்து விட்டு சிறிய உருவிலே காணப்பட்ட அம்பாளை வழிபட்டு வந்தார். சோமசுந்தரக்குருக்கள் அம்மூலமூர்த்தியை பார்த்த போது அது ஐயனார் சிலை என்றும் அம்மனாக வழிபாடு செய்து வந்தமையால் ஒரு அம்மன்சிலை செய்து வைக்குமாறு கூறினார். கௌரி அம்பாளை மூலமூர்த்தியாக கொண்டு விநாயகர், முரகன், நாகதம்பிரான் ஆகிய தெய்வங்களை பரிவாரமூர்த்தியாக கொண்டு 11-06-1993 இல் மகாகும்பாபிஷேகம் இடம்பெற்று அதனைத் தொடர்ந்து 1994 இல் எழுந்தருளி விநாயகரின் பிரதிஷ்ட கும்பாபிஷேகம் இடம்பெற்றது.

1994முதல் வைகாசி அத்த நட்சத்திரம் திருவோணம் வரையுள்ள 10 தினங்கள் அலங்கார உற்சவம் இடம்பெற்றுவருகின்றன. இவ்வாலயத்திற்கு மணிக்கோபுரம் அமைக்கப்பட்டு 20-01-2003 இல் கும்பாபிஷேகம் இடம்பெற்றது. நித்திய நைமித்திய பூசைகளும் இடப்பெற்று வருகின்றன.

மேற்கூறிய ஐயனார் சிலை எழுந்தருளி மூர்த்தியாக கொள்ளப்பட்டு வசந்த மண்டபத்தில் வைத்து பூசிக்கப்பட்டு வருவதுடன் ஐயனார் வீதியுலாவருவதும் வருடந்தோறும் நிகழப் பெறுகின்றது.

நன்றி: தகவல் – அடியார் குமாரசுவாமி
மூலம் – சீர் இணுவைத் திருவூர்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345