இணுவில் ஸ்ரீ விசாலாட்சி சமேத விஸ்வேஸ்வர சுவாமி கோவில்.

சைவத்தார் கோவில் எனவும், சிவன் கோவில் என அழைக்கப்படும் ஆலயம் இணுவில் கிராமத்தின் மத்தியிலே காங்கேசன் துறை வீதியில்  இணுவில் மத்திய கல்லூரிக்கு முன்பாக அமைந்துள்ளது. இவ்வாலயம் 100 வருடங்களிற்கு முன்னர் குருபூசைமடமாக இயங்கிவந்தது “சைவச்சின்னப்பிள்ளை” என அழைக்கப்பட்ட திரு வெ.சின்னத்தம்பி அவர்கள் சிவபூசை செய்துவந்த காலத்தில் குருபூசைகளும் விழாக்களும் இடம்பெற்றன. இவர் இந்தியாவில் உள்ளகாசிக்கு தலயாத்திரை செய்து கங்கா நதியில் கண்டெடுத்த சிவலிங்கத்தினை கொண்டு வந்து 1912 ஆம் ஆண்டு வைகாசி மாதம் திருவோண நட்சத்திரத்தில் பிரதிஸ்ட்டை  செய்து மகா கும்பாபிடேகம் செய்து சிவனுடைய கர்ப்பக்கிரகத்தினுள்ளே அம்பாளையும் பிரதிஸ்ட்டை செய்து காலையும் மாலையும் பூசை நடாத்திவந்தார்.

சின்னத்தம்பியின் மகனான சபாவதிப்பிள்ளை 1927இல் ஐப்பசி மாதம் 22 ஆம் நாள் அம்பாளுக்கு தனியான கற்பக்கிரகம்  அமைத்து ஸ்தாபகம் செய்தார். இதன்போது சிவனது கற்பக்கிரகம் ஒரு வாசலாக்கப்பட்டு அர்த்தமண்டபம், மகாமண்டபம், ஸ்தான மண்டபம் என அமைத்தும் பரிவார மூர்த்தங்களாக விநாயகர், சுப்பிரமணியர், வைரவர் போன்றவர்களையும் ஸ்தாபித்தார். இவரது பிள்ளைகளான சீவரத்தினம் அவர்களும் இராமநாதன் அவர்களும் பரிபாலனம் செய்து வந்தனர். 1958 இல் கந்தவனம் செல்லத்துரை என்பவரால்  மணிக்கோபுரம் கட்டப்பட்டு கண்டாமணியும் வழங்கப்பட்டது.
திருச.சீவரத்தினம், திரு. ச. இராமநாதன் காலத்திலேயே 1978ஆம் ஆண்டு வைகாசி மாதம் 12 ஆம் நாள் மகாகும்பாபிடேகம் இடம்பெற்றது. இவ்தினத்தையே பூர்த்தி நாளாக கொண்டு 25 நாட்கள் அலங்கார உற்சவம் இடம்பெறுகின்றன. 1987ஆம் ஆண்டு பிரதோ~மூர்த்தி பிரதிஸ்ட்டை செய்யப்பட்டு பிரதோஷ பூசையும் இடம்பெறுகின்றன
1995இல் பக்தன் ஒருவனின் கனவில் சென்று இக்கோவிலைக்காட்டி  தீர்த்தம் சரியில்லை நல்லதீர்த்தம் வெண்டுமென்று கூறியமையால் தனது பொறுப்பிலேயே ஒருதீர்த்தக்கிணறு அமைத்து தர முன்வந்தார். 1997 ஆம் ஆண்டிலேயே பாலஸ்தாபனம் செய்யப்பட்டு வசந்தமண்டபம,;  தம்ப மண்டபம் என்பன புதிதாக அமைக்கப்பட்டு 1998 ஆம் ஆண்டு சித்திரை மாதம் 18 ஆம் நாள் (01-05-1998) இல் மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது.
இதனைத்தொடர்ந்து வைகாசி அமாவாசைத்திதியை தீர்த்தமாக கொண்டு சிவனுக்கு 15 நாட்களும் ஆவணி பௌர்ணமியைத் தீர்த்தத்தினமாக கொண்டு அம்பாளுக்கு 10 நாட்களும் அலங்கார உற்சவம் இடம்பெறும் 1997 ஆம் ஆண்டிலிருந்து இவ்வாலயத்தின் பூசைப் பொறுப்பினை பிரம்மஸ்ரீ தாணு.வாசு தேவக்குருக்கள் அவரது புத்திரர்களும் பூசையாற்றி வருகின்றனர்.

நன்றி : சீ.பரமேஸ்வரன்
சீர் இணுவைத் திருவூர்

Sharing is caring!

Add your review

12345