இத்திக்கலட்டி (இலந்தைக் கலட்டி) ஸ்ரீ ஞானவைரவர் ஆலயம்

19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் ஒரு குடும்பம் பச்சிலைப்பள்ளியிலிருந்து குடிபெயர்ந்து இடைக்காட்டிற்கு மாட்டுவண்டியில் சகல வீட்டுத் தளபாடங்களுடன் வந்ததாகவும் அவ்வண்டியை அங்கிருந்து ஒரு நாய் பின் தொடர்ந்து வந்ததாகவும் இடைக்காடு இத்திக்கலட்டிக்கு வந்ததும் அந்நாய் அங்குள்ள இத்தி மரத்தடியில் தங்கி விட்டதாகவும் கூறுவர். வண்டியில் வந்த குடும்பத்தவர்கள் நாயைத் தங்கள் வீட்டிற்குக் கூட்டிச்செல்ல முயற்சித்தும் பயனளிக்கவில்லை என்றும் இதனால் அக்குடும்பத்தவர்கள் அந்நாயை இத்திமரத்தடியிலேயே வைத்து உணவு கொடுத்துப் பராமரித்து வந்தனர் என்றும் அது வயது முதிர்ந்து இறந்தபின் அவ் இத்தியடியில் திரிசூலமொன்றை நாட்டி வழிபட்டு வந்ததாகவும் ஓர் கர்ண பரம்பரைக் கதை உண்டு. இதன் சரிபிழை ஆராயத் தக்கது.

இத்தலத்தில் இலந்தை மரங்கள் அக்காலத்தில் மலிந்திருந்ததால் இலந்தைக்கலட்டி வைரவர் என்றும் அழைத்து வருகின்றனர். இக் கோவில் முதலில் வேலுப்பிள்ளை என்பவரும் அதன் பின் நமச்சிவாயம் என்பவரும் பராமரித்து வந்தார்கள் என்று அறியக்கிடக்கின்றது. மூலஸ்தான மண்டபமும் மகாமண்டபமும் கட்டி அதில் வைரவரை பிரதிஸ்டை செய்து வழிபட்டு வரப்படுகின்றது. 2002ம் ஆண்டில் மணிக்கோபுரமும் 2003ம் ஆண்டு முன் மண்டபமும் நிர்மாணிக்கப்பட்டுள்ளது மடப்பள்ளியும் கிணறும் இத்திருத்தலத்திற்கு உண்டு.

—-நன்றி—–
1.திரு. க. அருணாசலம் – இடைக்காடு
2.திரு. வை. தம்பு – இடைக்காடு
3.திரு. வே. சுவாமிநாதன் – இடைக்காடு
4.திருமதி. பொ. மகாதேவா – இடைக்காடு

Sharing is caring!

Add your review

12345