இந்துசாதனம் திருஞான சம்பந்தர்

இந்துசாதனம் திருஞான சம்பந்தர்

இந்துசாதனம் திருஞான சம்பந்தர் என்றவுடன் நமது மனக்கண்முன் தோன்றுவது உலகம் பலவிதக் கதைகள்தாம். இக் கதைகளே உண்மையான ஈழநாட்டு கதைகளாகும். கோபால-நேசரத்தினம், குலரத்தினம்-நேசமணி, காசிநாதான்-நேசமலர் என்ற இக்கதைகளை விருப்பத்தோடு படித்து அனுபவித்தவர்கள் பலர். அவை சரளமான நடையுடனும் வற்றாத நகைச்சுவையுடனும் திகழ்ந்தமையால் வாசகர்களை வசீகரித்தன. திருஞானசம்மந்தர் பத்திராசிரியர், பலநூல்களின் ஆசிரியர், இவற்றோடு நாடக ஆசிரியரும் ஆவார். 1913இல் சரசுவதி விலாச சபையை நிறுவி இராமாயனம்-அயோத்தி காண்டத்தை தாமே நாடகமாக எழுதி நகைச்சுவை பாத்திரமேற்று நடித்து அக்கலைவளருவதற்குப் பேருதவி புரிந்தார். யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரியில் 35வருட காலம் ஆசிரியப்பணிபூண்ட பிள்ளையவர்களின் கற்பிக்கும் ஆற்றலை இன்றும் பலர் நினைந்து வாயூறுகின்றனர். உரையாசிரியர் மட்டுவில் திரு க.வேற்பிள்ளை அவர்களின் குமாரர்களிளொருவராகிய இவரருக்குத் தமிழ்நடையும், ஆசிரியத்தொழிலும் பரம்பரைச்சொத்துக்கள். குலவித்தை கல்லாமற் பாகம்படுமன்றோ! நாவலர்நடையைப்பின்பற்றித் தாம் எழுதுவதாகப் பெருமையடைந்திருந்த ‘பண்டிதர்’ திருஞானசம்மந்தர் அவர்களுக்குத் தமிழ்ப் பத்திரிகை உலகில் ஒரு தனியிடமுண்டு.

By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345