காரைநகர் இந்துக் கல்லூரி

காரைநகர் என்னும் குக்கிராமத்தில் 19ம் நூற்றாண்டின் பிற்பகுதிகள் கல்வி பற்றிய சிந்தனை எழுச்சி பெற்ற காலமாகும். இக்காலத்தில் இங்கு தமிழ்மொழி சிரேஷ்ட வகுப்புக்கள் வரை கல்வி போதிக்கும் பாடசாலைகளாக சுந்தரமூர்த்தி நாயனார் வித்தியாசாலை, சைவப்பிரகாச வித்தியாசாலை, சுப்பிரமணிய வித்தியசாலை ஆகிய மூன்று பாடசாலைகள் மட்டுமே இயங்கிவந்தன. ஆங்கில மொழி கற்பிக்க பாடசாலைகள் எதுவும் இயங்கி வரவில்லை.

இக்குறையினை நிவர்த்தி செய்யும் முகமாக காரைநகர் மாப்பாணவூரியை சேர்ந்த திரு. கந்தப்பர் இலட்சுமணபிள்ளை, திரு. சிதம்பிரப்பிள்ளை கந்தப்பு, திரு. மு. கோவிந்தப்பிள்ளை ஆகியோரின் முயற்சியினால் திரு. மு. கோவிந்தப்பிள்ளை அவர்களது செhந்த நிலத்தில் 1888 ஆம் ஆண்டு ஆவணித்திங்கள் பெரியார் முத்து சயம்பு அவர்களால் ஒரு கிடுகு கொட்டகையில் ”இந்து ஆங்கிலப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டமை ஒரு வரலாற்று நிகழ்வாகும்.

இப்பாடசாலையில் பெரியார் சயம்பு அவர்கள் கலங்கரை விளக்கமாக நின்று மாணவர்களை நல்வழிப்படுத்தியதுடன் ஆசிரியராகவும், தலமை ஆசிரியராகவும் செயற்பட்டார். இந்து ஆங்கில வித்தியசாலை காலப்போக்கில் திருஞானசம்மந்த மூர்த்தி நாயனார் வித்தியாசாலை எனப்பெயர்மாற்றம் செய்யப்பட்டது.

பாடசாலையின் வளர்ச்சியுடன் மாணவர்தொகையும் அதிகரித்து வந்தது. பiழய கொட்டகை போதாமையினால் பல அன்பர்கள் மனமுவந்து பாடசாலைக்கு என ஒரு மண்டபத்தினையும் இரண்டு அறைகளைக்கொண்ட வகுப்பறைகளையும் அமைத்துக் கொடுத்தனர். இது வித்தியhசாலை வளர்ச்சிக்கட்டத்தினை நோக்கி எடுத்து வைத்த முதற்காலடியாகும். இக்கட்டிடத்தினை அக்காலப்பகுதியல் அரசாங்க அதிபராக இருந்த திரு. துவைனம் என்பவர் திறந்து வைத்தார்.

மாணவர்தொகை அதிகரித்து வந்ததினால் பாடசாலையின் மனேச்சராக திரு. வி. காசிப்பிள்ளை அவர்கள் நியமிக்கப்பட்டார். அத்துடன் 1911 இல் சிவத்திரு ஈ. கே. சிவசுப்பிரமணிய ஐயர் B.A, திரு ஐ. வ. குலசிங்கம், திரு. கா. சி. மகேச்சர்மா, சிவத்திரு. கா. சிவசிதம்பர ஐயர் ஆகியோர் உதவி ஆசிரியாக நியமிக்கப்பட்டனர். 1912 இல் உதவி நன்கோடை பெறும் பாடசாலையாக பதிவு செய்யப்பட்டது. அத்துடன் 1918 இல் யாழ்ப்பாணம் இந்துக்கல்லூரி அதிகார சபையிடம் இப்பாடசாலை நிர்வாக பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது.

1936 இல் பாடசாலை அதிபராக திரு. ஏ. கனகசபை  B.A நியமனம் பெற்றார். இந்து ஆங்கில வித்தியசாலை சிரேஷ்ட வித்தியசாலையாகி காரைநகர் இந்துக்கல்லூரி என பெயர்மாற்றம் பெற்றது.

கலாநிதி ஆ. தியாகராசா  அவர்கள் கல்லூரியின் அதிபராக நியமனம் பெற்றகாலம் கல்லூரியின் பொற்காலம் என போற்றப்படுகின்றது. 1946 தொடக்கம் தொடர்சியாக 28 வருடங்கள் சேவையாற்றிய பெருமைக்குரியவராக இவர் இருப்பதுடன் இவரது காலப்பகுதியல் விஞ்ஞான ஆய்வு கூடம், மனையியல் கூடம், நூல்நிலையம், வகுப்பறைகள் எனப் பௌதீக வளங்கள் விஸ்தரிக்கப்பட்டன. வரலாற்று பெருமைக்குரிய அமரர் நடராச நினைவு மண்டபம் அமரர் நடராசா அவர்களது மனைவியார் பண்டிதை தங்கம்மா அவர்களால் கட்டப்பட்டு கல்லூரிக்கு நன்கொடையாக வழங்கப்பட்டது. இம்மண்டபத்தினை அக்காலப்பகுதியல் நிதி மந்திரியாக இருந்த கௌரவ ஏ. எஸ். இராஜபக்சா அவர்களினால் திறந்து வைக்கப்பட்டது. அத்துடன் அமரர் நடராசா அவர்களினது உருவப்படம் அந்நாள் இலங்கை பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ஐவர் ஜென்னிங்ஸ் என்பவரால் திரை நீக்கம் செய்யப்பட்டது.

விளையாட்டு மைதானம் ஒன்றின் அவசியத்தினை உணர்ந்து திருமதி நடராசா அவர்களிடம் நினைவு மண்டபத்துடன் இணைந்து அன்னாரது நிலத்தினையும் தர்ம சாதனமாக பெற்று விளையாட்டு மைதானத்தினை உருவாக்கிய பெருமை இவரையே சாரும் இத்துடன் மலேசியா சென்று பiழய மாணவர்களிடம் நிதி சேகரித்து சயம்பு ஞாபகார்த்தமாக கீழ்மாடியில் வகுப்பறைகளும் மேல்மாடியில் நூல் நிலையமுமாக கொண்ட கட்டிடத்தினை 1959 ஆண்டு அமைத்தார். இது முன்னாள் சபாநாயகர் சேர். வைத்திலிங்கம் துரைச்சாமி அவர்களால் திறந்து வைக்கப்பட்து.

மேலதிக விபரங்களுக்கு
Karainagar Hindu College

நன்றி : காரைநகர் இந்துக் கல்லூரி இணையம்

Sharing is caring!

Add your review

12345