இராமநாதன் நுண்கலைப் பீடம் – இணுவில்

இணுவில் கிராமத்தின் வடபால் அமைவு பெற்றுள்ள நாற்சந்தியில் மருதயினார் என்ற பரோபகாரி ஒரு தங்கும் மடத்தை அமைத்தார். இது மருதனார் மடம் என மருவிற்று. இவ் இணுவிலில் பெண்கள் கல்வியை மேம்பாடு செய்யவும், சமயாசாரப்படி பாதுகாப்பாக வாழவும், நுண்கலைகளைப் பயிலவும் இராமநாதன் நுண்கலைப் பீடத்தினை அமைத்தார். அக்கல்லூரியின் மேற்குப் பக்கத்திலே ஒர் இல்லத்தையும் அமைத்து வாழ்ந்து உள அமைதி கண்டார்.

இவரது மருகரான நடேசம்பிள்ளை இவருடைய சேவையினை தான் செயற்படுத்தினார்.
நடேசம்பிள்ளையின் முயற்சியால் 09-10-1960 இல் இராமநாதன் இசைக்கல்லூரி ஆரம்பமானது. நூற்றுக்கனக்கான மாணவர்கள் நன்கு கற்றுத்தேற வாய்ப்பாகியது. அண்ணாமலைப் பல்கலைக்கழக துணைவேந்தர் உயர் திரு நாராயணன் பிள்ளையவர்களால் தொடக்கப்பட்டது. இக்கல்லூரியில் நான்கு ஆண்டுகள் கற்று     “சங்கீத ரத்னம்” தேர்வில் தோற்றியவர்களிற்கு பட்டமும் வழங்கப்பட்டது. 1960 இல் அரசு இக்கல்லூரியை பொறுப்பேற்றுக் கொண்டது. நுண்கலைக் கழகத்தின் கலைப்பகுதி கர்நாடக சங்கீதம், மிருதங்கம் போன்ற துறைகளைக் கொண்டது. சிறப்பு வாய்ந்த சங்கீத பூசனம் இராமநாதன் மிருதங்கத் துறையில் சிறப்புடன்  வழிகாட்டியதன் பெயரில் சில சீடர்கள் உருவானார்கள். அந்தவகையில் ப.சின்னராசா, சி.மகேந்திரன் போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர். பரதநாட்டிய நெறி 01-03-1973 இல் கிருஸ்ணானந்தியின் கீழ் உதயமானது. 1974 இல் இராமநாதன் நுண்கலைப் பீடம் யாழ் பல்கலைக் கழகத்துடன் இணைக்கப்பட்டது. போராசிரியர் கா.சிவத்தம்பியவர்களின் தலைமையில் இயங்கிய நுண்கலைப்பீடம் 1992 இல் சபா.ஜெயராசா அவர்களைத் தலைவராக கொண்டு தனிப் பீடமாக இயங்குகின்றது.

கர்நாடக இசை வாய்பாட்டுக்கு எஸ். பத்மலிங்கமும் இசைக்கு எஸ்.சோமசுந்தர சர்மாவும், பரதநாட்டியத்திற்கு செல்வி பத்ம ரஞ்சினி உமாசங்கரும், பண்ணிசைக்கு மு.நவரத்தினமும் இணைப்பாளராக அன்று நியமிக்கப்பட்டனர். சித்திரமும் வடிவமைப்பும் ஒருதுறையாக ஆரம்பிக்கப்பட்டு பிரபல ஓவியர் ரமணி முதலியோர் விரிவுரையாளராகப் பணியாற்றுகின்றனர். மிகுதியாக இருந்த காணியில் அண்மையில் அமைக்கப்பட்ட கட்டிடத் தொகுதியில் நுண்கலைப் பீடம் திறம்பட இயங்கி வருகின்றது. இக்கலைப் பீடத்தில் படித்து பட்டம் பெற்று சகல துறைகளிலும் வெளியானவர்கள் இன்று வெளிநாட்டிலும், இலங்கையிலும் சிறப்பான கலைத் தொண்டில் ஈடுபட்டுள்ளனர் என்றால் இக்கலைப் பீடத்தின் பெருமையேயாகும்.

நன்றி : தகவல் – மூ.சிவலிங்கம்
தட்டச்சு – க.சுகதீஸ்

Sharing is caring!

Add your review

12345