ஈழத்து சித்தர்கள்

ஈழத்து சித்தர்கள் மரபியலில் அட்டமா சித்திகளையும் அடைந்த பதினெண் சித்தர்கள் மேலானவர்களாக போற்றி வணங்கிடப் படுகின்றனர். இவர்கள் பெரும்பாலும் இந்திய துணைக் கண்டத்தினை சேர்ந்தவர்கள். காலத்தால் மிகவும் முந்தியவர்கள்.

ஈழத்து சித்தர்கள்

பலரும் அறிந்திடாத தகவல் ஒன்றினை இங்கே பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். தமிழகத்தின் சித்தர்களைப் போலவே ஈழத்து சித்த பரம்பரை என ஒன்று இருந்திருக்கிறது. இவர்கள் காலத்தால் பிந்தியவர்கள். சமூக அமைப்பில் இருந்து விலகியவர்களாய் இருந்ததால், இவர்கள் குறித்த பெரிதான குறிப்புகள் ஏதும் நமக்கு கிடைக்கவில்லை.

நமக்கு கிடைத்திருக்கும் தகவல்களை பார்க்கும் வேளையில் இவர்களைப் பற்றிய விவரங்கள் ஆச்சர்யம் தருபனவாய் இருக்கிறது. சில பெண் சித்தர்களைப் பற்றிய குறிப்புகளும் காணக் கிடைக்கின்றன. தமிழகத்தில் இருந்து வந்து போன சித்தர்களைப் பற்றிய குறிப்புகள், ஈழத்துச் சித்தர்கள் ஜீவசமாதியடைந்த இடங்களைப் பற்றிய குறிப்புகள் என பகிர சுவாரசியமான தகவல்கள் அவை!

இந்த குறிப்புகளின் அடிப்படையில், ஈழத்தின் நாக்கு திசைகளிலும், நான்கு பெரும் சித்த சமாதிக் கோவில்கள் இருப்பதாக தெரிகிறது.
அவையாவன, வடக்கே யாழ்ப்பாணத்தில் கடையிட் சுவாமிகள் சமாதியும், கிழக்கே காரை தீவில் சித்தனைக் குட்டி சுவாமிகள் சமாதியும், மேற்கே கொழும்பு முகத்துவாரத்தில் பெரியானைக் குட்டி சுவாமிகளின் சமாதியும், தெற்கே நாவலப் பிட்டியில் நவநாத சித்தர் சமாதியும் விளங்குகின்றன.

ஈழத்து சித்த மரபியலில் முக்கிய இடம் வகிக்கும் ஈழத்து பதினெண் சித்தர்கள்…

கடையிற்சுவாமிகள்.
பரம குரு சுவாமிகள்
குழந்தை வேற் சுவாமிகள்.
அருளம்பல சுவாமிகள்.
யோகர் சுவாமிகள்
நவநாத சுவாமிகள்
பெரியானைக் குட்டி சுவாமிகள்
சித்தானைக் குட்டி சுவாமிகள்
சடைவரத சுவாமிகள்
ஆனந்த சடாட்சர குரு சுவாமிகள்
செல்லாச்சி அம்மையார்
தாளையான் சுவாமிகள்
மகாதேவ சுவாமிகள்
சடையம்மா
நாகநாத சித்தர்
நயினாதீவு சுவாமிகள்
பேப்பர் சுவாமிகள்
செல்லப்பா சுவாமிகள்.

சட்டைமுனி என்ற ஒரு சித்தரைப் பற்றிய ஒரு பாடல் வரிகள் இதோ:

பாலனாம் சிங்கள தேவதாசி
பாசமுடன் பயின்று எடுத்த புத்திரன்தான்
சீலமுடன் சட்டைமுனி என்று சொல்லி
சிறப்புடனே குவலயத்தில் பெயர் உண்டாச்சு.

– போகர் ஏழாயிரம் ( பாடல்: ஐந்து எட்டு ஏழு ஐந்து ).
ஒரு சிங்கள தேச பெண்ணுக்கும் ஒரு தமிழருக்கும் மகனாக பிறந்தவர் சட்டைமுனி என்றும், பிழைப்புக்காக குடும்பத்தோடு தமிழகம் வந்தனர் என்றும் அந்நூலில் கூறப்பட்டுள்ளது. இவர் போகர் மற்றும் கருவூராரிடம் சீடராக இருந்ததாக தெரிகிறது. சட்டைமுனி ஸ்ரீரங்கத்தில் ஜீவசமாதி ஆனதாக வைணவர்களும், சீர்காழியில் சமாதி ஆனதாக சைவர்களும் கூறுகிறார்கள். ( போகர் ஜனன சாகரம்).

நன்றி- சித்தர்கள் இணையம்

Sharing is caring!

4 reviews on “ஈழத்து சித்தர்கள்”

  1. தமன் says:

    சித்தர்களை ”பிரபலமானவர்கள் ” என்னும் தலைப்பினுள் அடக்குவது பொருத்தமற்றது. அவர்கள் பிரபலமடைவதை விரும்பியவர்கள் அல்ல.

  2. குடையிற் சுவாமிகள் பற்றிய ஆவணபடுத்தல் தகவல்தங்களிடம் உள்ளதா? நாம் எமது தளம் ஊடாக செயற்பட சிறிய தடங்கல்கள் உள்ளன். அவர் கோண்டாவிலை பிறப்பிடமாகக் கொண்டவர். பலரால் தெய்வமாக(குரு)வாகப் பார்கப்படுபவர் அவரது பதிவுகள் இணையத்தில் காணபடவில்லை. மில்வைட்சோப் கனகராசாவுடன் பெரிதும் தொடர்புபட்டவர் இவர்.

    இணையத்தில் இவரது தடத்தை பதிக்க முற்படுவோம்.

  3. குறிப்பிட்ட சில தகவல்கள் மட்டுமே உள்ளன. தங்களிடம் இருப்பின் ஒரு முழுமையான ஆக்கமாக மாற்ற முடியும்.

  4. எமக்கும் தகவல்கள் கிடைக்க பெறவில்லை வேண்டிய அளவு. முயற்சிக்கின்றோம்.பலாலி வீதியில் அமைந்துள்ள பேபி ஸ்ருடியோ என்பவ் அவரது பரமபக்தன். ஆகவே அவரை வினாவினால் சில தகவல்கள் பெற்றுக் கொள்ளமுடியும். சுவாமிகள் கொக்குவில் பிரதேசத்தில் உள்ள வீடுகளுக்கும் வருகை தருபவராம். மழை வெய்யில் எது வென்றாலும் கையில் உள்ள குடையினை பிரயோகிக்க மாட்டார் என்று கேள்வி

Add your review

12345