ஈழத்து பத்திரிகைத்துறையின் வளர்ச்சி

19ஆம் நூற்டறாண்டில் ஆங்கிலேயரின் வருகையுடன் சுதேசிகளுக்கான அச்சியந்திரப் பயன்பாட்டு வசதிகள் உண்டாகின. இவ் அச்சுச் சுதந்திரமானது பத்திரகை, சஞ்சிகை போன்றவற்றின் வெளியீட்டு முயற்சியில் பெரிதும் செல்வாக்குச் செலுத்தியது.

அக்கால ஊடகத்துறையில் அரசியலும், சமயமும், சமூகமும் பெற்றளவு செல்வாக்கினை அறிவியல் பெறவில்லை என்பது வருந்தப்பட வேண்டிய விடயமே. அமெரிக்க மிசநெறிமார் ஆரம்பித்த ‘உதயதாரகை’  1841இல் வெளியான முதல் பத்திரிகை ஆகும். ஆர்னோல்ட் சதாசிவம்பிள்ளை ஆசிரியராகப் பொறுப்பேற்ற பின்னர் தான் ஆறுமுகநாவலரின் துணையுடன் உதயதாரகை புதுப்பொலிவு பெறத் தொடங்கியது. உதயதாரகையின் பின்னர் பல பத்திரிகைகள் வெளிவரத் தொடங்கின. 1841-1900ஆம் ஆண்டு வரை வெளிவந்த சில குறிப்பிடத்தக்க பத்திரிகைகள், சஞ்சிகைகளினை இவ் அட்டவணையில் நோக்குக.

சஞ்சிகையின் பெயர் விடயம் ஆண்டு

உதயதாரகை- கிறிஸ்தவபிரச்சாரம்- 1841
உதயாதித்தன் -இந்துசமய பிரச்சாரம் 1841
உரைகல்லு -கத்தோலிக்கம் 1845
இலங்கை – நேசன் பொது 1848
வித்தியா தர்ப்பணம் – பொது 1853
தின வர்த்தமானி செய்தி,- அறிவியல் 1855
பாலியர் நேசன் – சிறுவர் இதழ் 1859
பிறீமன் – பொது 1862
இலங்காபிமானி – சமயம், பொது 1863
புதினாதிபதி – செய்தி 1870
யாழ்ப்பாணச் செய்தி – அரசியல், சமயம், அறிவு 1871
உதயபானு – சைவம் 1880
சைவசம்போதினி – சைவம் 1881
விஞ்ஞானவர்த்தனி – சைவம் 1882
முஸ்லீம்நேசன் – முஸ்லீம் முன்னேற்றம் 1882
இஸ்லாம்மித்திரன் – இஸ்லாம் 1893
மாணவன் – கிறிஸ்தவம் 1896
முஸ்லீம் பாதுகாவலன் – முஸ்லீம் முன்னேற்றம் 1900
திராவிடகோகிலம் – சைவம் 1900
சத்தியவேத பாதுகாவலன் – சைவம் 1901

(-நூற்பட்டியலாக்க உதவி-‘ஈழத்தமிழ் இலக்கியத்தில் அறிவியல் நூல்கள்’ வல்வை ந.அனந்தராஜ்-)

அறிவியல் சார் அம்சங்கள் குறைவாக இருப்பினும், பொதுவாக இக்காலப்பகுதியில் எழுந்த பத்திரிகைகளில் ஒருவிதமான பன்முகப்பாட்டைக் காணமுடிகின்றமை விசேடமானது. எளிமையான உரைநடை, புதமையாக்கம், உரைநடையில் நெகிழ்ச்சி, வசன அமைப்பில் மாற்றம் போன்ற தன்மைகளினையும் இப்பத்திரிகைகள் வெளிக்கொணர்ந்தமையினால் பிற்கால உரைஇலக்கிய வளர்ச்சிக்கும் வழிசமைத்த சாதனமாக விளங்குகின்றன.

 

நன்றி – தகவல் thiyaa.com இணையம்

 

Sharing is caring!

Add your review

12345