உசனுக்கோர் நாவல்லர் பண்டிதர் திரு.சி.சரவணமுத்து

உசனுக்கோர் நாவல்லர் பண்டிதர் திரு.சி.சரவணமுத்துஉசனுக்கோர் நாவல்லர் பண்டிதர் திரு.சி.சரவணமுத்து அவர்கள் உசனில் பிறந்து உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் கல்விபயின்று ஆசிரிய பணியையும் மேற்கொண்ட பண்டிதர் அவர்கள் சாவகச்சேரி டிறிபேக், சண்டிலிப்பாய், ஹெரனை, களுவாஞ்சிகுடி, கொழும்பு போன்ற இடங்களின் கல்வி கற்பித்து பின் தான் கல்விகற்ற உசன் இராமநாதன் மகா வித்தியாலயத்தில் ஆசிரிய பணி செய்யும்  வாய்ப்பை பெற்றார்.  உசன் பாடசாலையில் நீண்டகாலம் பணியாற்றி இளைப்பாறினார்.
இவர் கல்வித்துறையில் பண்டிதர், வித்துவான், சைவப்புலவர் என்னும் மூன்று பட்டங்களை பெற்றுக்கொண்டார். அது போல்  இல்வாழ்க்கையிலும் மூன்று பிள்ளைகளுக்கு தந்தையானார். கடமையில் கண்ணியமாகவும் நேர்மையாகவும் வாழ்ந்தவர் பண்டிதர் சி சரவணமுத்து அவர்கள்.
தற்போது ஐக்கிய அமெரிக்காவில் தனது இளைய மகளின் குடும்பத்துடன் வாழ்ந்து வரும் இவருக்கு. இவரிடம் கல்விபயின்ற மாணவர்கள் அனைவரும் ஒன்றிணைந்து இவரின் மகத்தான சேவையை பாராட்டி 2008 ம் ஆண்டு. கனடாவில் நடந்த குளிர்கால ஒன்றுகூடல் நிகழ்வில். உசனுக்கோர் “நாவல்லர்”  என்னும் பட்டம் வழங்கி கௌரவித்தனர்.
இன் நிகழ்வில் இவரிடம் கல்வி பயின்று பட்டதாரியான திருமதி .பு.விஜயகுமாரி சிறப்புரை வழங்க. வைத்திய கலாநிதி Dr .இந்திரன் ஆசிர்வாதம் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். பண்டிதர் சி சரவணமுத்து அவர்கள் நீடூடிகாலம்
சீரும் சிறப்புடனும் வாழ  உலகில் வாழும் அவரிடம் கல்விபயின்ற  அனைத்து மாணவர்களும் வாழ்த்துகின்றனர்.

By -‘[googleplusauthor]’

நன்றி – மூலம் – உசன் இணையம்

Sharing is caring!

Add your review

12345