உரல் உலக்கை

உரல் உலக்கை
உரல் உலக்கை ஆரம்ப காலங்களில் மட்டுமல்லாமல் தற்போதும் கூட சில இடங்களில் பாவனையில் உள்ளது. வேம்பு, பாலை மரத்தால் செய்யப்படும் உரல் பாவனை இருந்தது. பின்னர் கருங்கல்லில் உரல் செய்யப்பட்டது. உலக்கை மரத்தால் செய்யப்பட்டு முனைகளில் பூண் போடப்படுகிறது. இல்லாவிட்டால் உலக்கையின் பாவனை சில நாட்களே இருக்கும். அரிசி , குரக்கன், உழுந்து போன்ற தானிய வகைகளை இடிப்பதற்கும் துவையல் தயாரிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது. தற்போது இயந்திரங்கள் மூலம் அரைத்தல் மேற்கொள்வதற்கு வசதிகள் வந்த படியால் மிக விரைவாக வேலைகளை முடிக்கக்கூடியவாறு இருந்தாலும் அரைக்கும் பதார்த்தங்களுடன் உலோக துகழ்களும் கலப்பதால்
உடல் ஆரோக்கியத்திற்கு பாதகமாகத்தான் அமைகிறது. அது மட்டுமல்லாமல் நவீன மயப்படுத்தலுடன் நம் பெண்களுக்கு வேலைகள் இலகுவாக்கப்பட்டு சோம்பல் தன்மையும் உடல் உபாதைகளும் ஏற்படுகிறது. முன்னர் மா இடிப்பதென்றால் தனியாக அல்லது இருவராக உரலில் அரிசி இட்டு உலக்கையால் இடிப்பார்கள். அதிலும் கைமாற்றி கைமாற்றி உலக்கை பயன்படுத்துவது என்பது ஒரு சிறந்த உடல் பயிற்சியாக கூட இருந்தது. அதனால்தான் முன்பு பெண்கள் நல்ல ஆரோக்கியத்துடனும் கட்டழகுடனும் இருந்தனர் என்பதை யாராலும் மறுக்க முடினாது. இந்த உரல், உலக்கை எல்லாம் இன்று மறந்த ஒன்றாக மாறிவிட்டது.

By – Shutharsan.S

Sharing is caring!

1 review on “உரல் உலக்கை”

  1. Jayaraman says:

    Can I get one this? If so let me know the Price including despatch to chennai

Add your review

12345