உரும்பிராய் காட்டு வைரவர் கோவில்

உரும்பிராய் காட்டு வைரவர் கோவில் ஆனது உரும்பிராய்ச் சந்தியிலிருந்து சுமார் ஒரு மைல் வடக்கே, கிழக்கு – மேற்காக மூன்று கோவில்கள் அமைந்திருக்கின்றன. கிழக்கே அமைந்திருக்கின்ற கோவில் உரும்பிராய் கிழக்குப் பகுதியில் இருக்கும் மக்களாலும், நடுவே இருக்கின்ற கோவில் உரும்பிராய் வடக்குப் பகுதியில் வாழும் மக்களாலும், மேற்கே இருக்கின்ற கோவில் எல்லோராலும் பராமரிக்கப்பட்டும் வருகின்றன.

 
உரும்பிராய் காட்டு வைரவர் கோவில்
பல வருடங்களுக்கு முன்னர் இக்கோவில்களில் பொங்கல் தினங்கள் என்றால் ஊரே களைகட்டிவிடும். சித்திரை வருடப்பிறப்பின் முதல் வரும் சனிக்கிழமை முதல் மடை என்றும், வருடப்பிறப்பின் அடுத்து வரும் சனிக்கிழமையை இரண்டாம் மடை என்றும் பெயரிட்டு வெகு விமரிசையாகக் கொண்டாடுவர். அம்மாக்கள் பலர்கூடி இரவிரவாக பலவகையான பலகார வகைகள் செய்வார்கள். முறுக்கு, சீனிப்பணியாரம், வடை, பால் ரொட்டி என பலவகையான பலகார வகைகள் செய்வார்கள். இரவிரவாகக் கண்விழித்துச் செய்த பலகாரங்களையும், பல வாழைக்குலைகளையும் கொண்டு வந்து அதிகாலையில் கோவில்களில் மடை போடுவார்கள். யாருடைய மடை பெரிது, யாருடைய ஆட்டுக்கடா பெரிது என்ற ஓர் ஆரோக்கியமான போட்டியும் எப்போதும் இருக்கும்.
அன்று காலை சிலர் மேளதாளத்தோடு தாம் வளர்த்த ஆட்டுக்கடாக்களுக்கு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் செல்வார்கள். ஈழத்தின் பல பகுதிகளில் இருந்தும் பலர் அங்கே வருவார்கள். பெரிய அளவில் மக்கள் கூட்டத்தை அங்கே காணலாம். பல தற்காலிக வியாபார நிலையங்களும் அங்கே உருவாகி மறையும். சிறுவர் முதல் பெரியோர்வரை மிகவும் மகிழ்வாக அந்த நாட்களில் உண்டு, களித்து மகிழ்வார்கள்.
 
எழுபதுகளின் ஆரம்பகாலப் பகுதியில் அரசாங்கம் கோவில்களில் உயிர்ப்பலி கொடுப்பதைத் தடை செய்தது. உரிமைப் போராட்டங்களினால் பழுதடைந்திருந்த கோவில்கள் தற்போது புனருத்தாரணம் செய்யப்பட்டு வருடந்தோறும் மிகவும் சிறப்பாகத் திருவிழாக்கள் நடைபெற்றுவருகின்றன. கோவில்களும் புனருத்தாரணம் செய்யப்பட்டபின்னர் மிகவும் அழகாகவும் காணப்படுகின்றன.
உரும்பிராய் காட்டு வைரவர் கோவில்
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
நன்றி- மூலம்- உரும்பிராய் இணையம்.

Sharing is caring!

1 review on “உரும்பிராய் காட்டு வைரவர் கோவில்”

  1. ram says:

    உரும்பிராய் காட்டு வைரவர் கோவில்

Add your review

12345