உரும்பிராய் சிதம்பர சுப்பிரமணிய சுவாமி

பரத்தைப்புலம் என்னும் குறிச்சியிலேயே இவ்வாலயமும் அமைந்துள்ளது. கிராமத்தில் உள்ள ஒரேயொரு கந்தசுவாமி கோயில் இதுவொன்றேயாகும். ஒருகாலத்திற் கீலமடைந்திருந்த இவ்வாலயம் சைவப் பெரியார்களின் முயற்சியினால் புனருத்தாரணஞ் செய்யப்பட்டு நான்கு தசாப்பதங்களாகப் பூசை திருவிழாக்களுடன் நன்கு நடைபெற்று வருகிறது உரும்பிராயில் ஒரு கதிர்காமம் என்ற சிறப்பைத் தன்னகத்தே கொண்டது. இங்கே அலங்காரத் திருவிழாக்கள் கதிர்காமத் திருவிழாக்காலத்திலே நடைபெற்று வந்தன. தொடர்ந்தும் இடம்பெறும்.

தைப்பூசத் திருநாளைத் தீர்த்தோற்சவ தினமாக கொண்டு 1993ம்ஆண்டு முதன்முதலாக மஹோற்சவம் நடைபெற்றது. வழிகாட்டியாக இருந்து இம் மஹோற்சவத்தை முதன்முதலாக நடத்தி வைத்த பெருமையைப் பெறுகின்றார் உரும்பிராய் கருணாகரப் பிள்ளையார் கோயிலின் பிரதம சிவாச்சாரியர் ‘ சிவாச்சார்யமணி” சிவஸ்ரீ வை. சபாரத்தினக் குருக்கள் அவர்கள்.

வாகீசகலாநிதி கி. வா. ஜகந்நாதன், கவிஞர் செ. ஐயாத்துரை முதலானவர்கள் சிதம்பரசுப்பிரமணிய சுவாமி மீது துதிப் பாடல்கள் பலவற்றைப் பாடியுள்ளனர். சிதம்பர சுப்பிரமணிய சுவாமி பற்றிய கட்டுரைகளும் வெளிவந்துள்ளன.

 

நன்றி – ஆக்கம்- ஆசிரியமணி திரு அ பஞ்சாட்சரம்

மூலம்- உரும்பிராய் சைவத்தமிழ் வித்தியாலய பவளவிழா மலர் – 1992

http://www.eurumpirai.comஇணையம்

Sharing is caring!

Add your review

12345