போர்த்துக்கீசர் கோட்டை

ஊர்காவற்றுறையில் அமைந்துள்ளது. போர்த்துக்கேயரால் அமைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு அருகாமையில் ஹீ மென்கில் கோட்டை அமைந்துள்ளது. இடிபாடுகளுடன் காணப்படுகிறது. இதற்கு நடுவாக ஒற்றையடிப்பாதையும் தற்போது பாவனையில் உள்ளது. வரலாற்றுடன் நெருங்கிய தொடர்புடைய இக்கோட்டைகள் ஆராட்சி செய்யப்படவேண்டியன.

போர்த்துக்கீசரும் நெடுந்தீவின் கேந்திர முக்கியத்துவத்தை உணர்ந்து நெடுந்தீவின் மேற்கே பெரியதுறை என்னும் துறைமுகத்திற்கண்மையில் ஓரு கோட்டை தற்போது இடிந்த நிலையில் உள்ளது. அங்கிருந்து முன்னர் ஆட்சி செய்தனர். இக்கோட்டை பற்றி பாசெற் என்னும் பாதிரியார். இது ஒரு இரண்டு மாடிக் கட்டடமாகக் கட்டப்பட்டிருந்தது இதன் சுவர்கள் மிகவும் அகலமாகவிருந்தன. மேலே இரண்டு அறைகளும், கீழே இரண்டு அறைகளுமிருந்தன. இவற்றுக்குக் கீழே ஒரு சுரங்க அறையிருந்தது. அதற்குக் கதவுகள் போடப்படவில்லை. அவ்வறையிலிருந்து மேலறைக்குச் செல்லக் கூடியதாக இரட்டைச் சுவர்ப்படி கட்டப்பட்டிருந்தது. அதற்கு வெளிப்புறமாக நாலு அடி சதுர யன்னல் அமைக்கப்பட்டிருந்தது. இதன் கூரை தட்டையாகவிருந்தது எனவும் கூறியுள்ளார்.

Sharing is caring!

Add your review

12345