ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி

ஊர்காவற்றுறை புனித அந்தோனியார் கல்லூரி ஆனது புனித அந்தோனியார் ஆலயத்துக்கு அருகாமையில் அழகிய நீலக் குடாக்கடலுக்கு கிழக்குப்பக்கமாக மார்ச் 1872 இல் இப்பாடசாலை உருவாக்கப்பட்டது.
யாழ்ப்பாண அப்போஸ்தலிக்க ஸ்தானிகர் மேதகு கிரிஸ்தோப்பர் பொஞ்சின் அ.ம.தி அவர்களின் காலத்தில் ஊர்காவற்றுறை பங்குத்தந்தையாக விளங்கிய பிரான்ஸ் நாட்டு மறை போதகர் அருள்திரு ஜே.பொய்கோ அ.ம.தி அவர்களால் யாழ் குடாநாட்டுக்கு வெளியே முதன் முதலாக ஆங்கிலமும் கற்பிக்கும் கல்லூரியாக இது ஸ்தாபிக்கப்பட்டது.
ஊர்காவற்றுறை மக்கள் இப்பாடசாலைக்கான காணியினை வழங்கினார்கள். இப்பாடசாலையின் முதலாவது தலைமையாசிரியராக திருவாளர் ஏ.சுவாம்பிள்ளை நியமிக்கப்பட்டார்.
1907 இல் கல்லூரி ஆங்கிலப் பாடசாலையாகப் பதிவு செய்யப்பட்ட பின்னர், ஆரம்ப பாடசாலைக் கட்டிடம் 1909 இல் விஸ்தரிக்கப்பட்டது.
இப்பாடசாலையின் துரித வளர்ச்சியும், மாணவர்களின் பரந்த ஆங்கில கல்வி அறிவும், இப்பாடசாலையை ஆங்கிலப் பாடசாலையாகத் தரமுயர்த்த வேண்டும் என்ற தீவுப் பகுதி மக்களின் அவாவும் 1921 இல் நிறைவு கண்டது. 1921 இல் இருந்து ஆங்கிலம், தமிழ் என்னும் இரு பிரிவுகள் பாடசாலையில் இயங்கத் தொடங்கின.
புனித சூசையப்பர் சபை சகோதரர்களின் மேற்பார்வையில் 1896 முதல் 1938 வரை இக்கல்விக் கூடம் பாரிய வளர்ச்சி கண்டது.
1938 இல் கல்லூரி குருமாரின் பராமரிப்பில் கொண்டுவரப்பட்டது.
1950-1960 காலகட்டத்தில் இப்பாடசாலை விஞ்ஞானக் கல்வியில் பெரும் வளர்ச்சி கண்டது.
இக்கல்லூரி 1978-02-01 இல் அரசிடம் கையளிக்கப்பட்டது.
1990 இல் உள்நாட்டுப் போர் தீவிரமடைந்த போது ஊர்காவற்றுறை கரைப் பகுதியை விட்டு மக்கள் வெளியேறிய நிலையில் இக் கல்லூரியும் இடம்பெயர்ந்தது. இடப்பெயர்வுக் காலத்தில் பெரும் நெருக்கடிகளைச் சந்தித்த இப்பாடசாலை, 1997 இல் மீண்டும் தனது சொந்த இடத்திற்குத் திரும்பி இயங்கத் தொடங்கியது.
அரச சார்பற்ற நிறுவனங்களின் உதவியுடன் தனது பௌதீக வளங்களை ஒருங்கிணைத்து, புனரமைப்புச் செய்து, இயங்கிவரும் இப்பாடசாலை தற்போது 1000 பாடசாலைத் திட்டத்துக்குள் உள்வாங்கப்பட்டு அபிவிருத்திப் பாதையில் பயணித்து வருகின்றது.
தற்போது 1AB தரத்திலுள்ள இப்பாடசாலையில் தரம் ஆறு முதல் க.பொ.த.உயர்தரம் வரையாக 480 மாணவர்கள் கல்விகற்று வருகிறார்கள்.

நன்றி – மூலம்- ஊர்ப்பக்கம் இணையம்

Sharing is caring!

Add your review

12345