எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம்

எழுத்தாளர் என்.கே.மகாலிங்கம். தமிழ் இலக்கிய உலகில் ‘பூரணி‘ மகாலிங்கம் என அறியப்பட்டவர். இவரும் அறுபதுகளிலிருந்து இன்றுவரை தமிழ் இலக்கிய உலகில் தன் பங்களிப்பை சிறுகதை, கவிதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, விமரிசனம் எனப் பல்வேறு வழிகளில் ஆற்றி வருபவர்.

‘பூரணி’ என்னும் சஞ்சிகை இவரை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்ததன் காரணமாகவே இவர் ‘பூரணி’ மகாலிங்கம் என அழைக்கப்பட்டார். கனடாவிலிருந்து வெளிவரும் ‘காலம்‘ சஞ்சிகையின் ஆசிரியர் குழுவில் இவரும் ஒருவர்.

அண்மையில் காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட, நோபல் பரிசு பெற்ற நைஜீரிய எழுத்தாளர் ‘சினுவா ஆச்சிபி‘யின் மிகவும் புகழ்பெற்ற நாவலான ‘Things Fall Apart‘ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘சிதைவுகள்‘ நாவலைத் தமிழுக்கு மொழிபெயர்த்தவர் இவரே. இவரது ‘உள்ளொளி‘ என்னும் கவிதைத்தொகுதி ‘காலம்‘ வெளியீடாக வெளிவந்துள்ளது.

Sharing is caring!

Add your review

12345