எழுத்தாளர் குரு அரவிந்தன்

ஈழத்தமிழ் எழுத்தாளர்களில் இன்று அதிக வாசகர்களைக் கொண்ட எழுத்தாளர்களில் ஒருவராகத் திகழும் குரு அரவிந்தன் காங்கேயன்துறையைச் சேர்ந்த மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்டவர். நடேஸ்வராக்கல்லூரி, மகாஜனாக்கல்லூரி போன்றவற்றின் பழைய மாணவரான இவர் தற்சமயம் புலம்பெயர்ந்து கனடாவில் வசிக்கின்றார்.

இவரது படைப்புகள் வெளிவந்த ஊடகங்கள்.

விகடன் தீபாவளி மலர், விகடன் பவளவிழா மலர், ஆனந்தவிகடன், கலைமகள், கல்கி, குமுதம், யுகமாயினி (தமிழ்நாடு), தாய்வீடு, தூறல், உதயன் (கனடா), தினக்குரல், வீரகேசரி, வெற்றிமணி(யேர்மனி), புதினம்(லண்டன்), உயிர்நிழல்(பாரிஸ்), வல்லினம் (மலேசியா), காற்றுவெளி(லண்டன்), பதிவுகள்(இணையம்) திண்ணை(இணையம்) தமிழ் ஆதேஸ்(இணையம்)

விருதுகள் – பரிசுகள்:

தங்கப் பதக்க விருது: உதயன் சிறுகதைப்போட்டி – கனடா
சிறந்த சிறுகதை விருது: வீரகேசரி மிலேனியம் இதழ்
சிறுகதைபோட்டி -முதற்பரிசு: கனேடிய தமிழ் வானொலி-2007
சிறுகதை சிறப்புப் பரிசு: கந்தர்வன் நினைவுப் போட்டி-2008 (தமிழ்நாடு)
குறுநாவல் போட்டி: சிறப்புப்பரிசு – யுகமாயினி-2009 (தமிழ்நாடு)
ஓன்ராறியோ முதல்வர் விருது : 10 வருட தன்னார்வத் தொண்டர் விருது – 2010 (கனடா)
குறுநாவல் போட்டி கலைமகள் விருது: கலைமகள் (தமிழ்நாடு) ராமரத்தினம் நினைவுப் பரிசு-2011
புனைகதை வித்தகன்: சிறப்புக் கௌரவம் – கனடா பீல் தமிழர் அமைப்பு-2011
தமிழர் தகவல் இலக்கிய விருது – 2012 – கனடா.

வெளிவந்த நூல்கள்: தமிழகத்தில் மணிமேகலைப் பிரசுரவெளியீடுகள்:

சிறுகதைகள்:
இதுதான் பாசம் என்பதா?
என் காதலி ஒரு கண்ணகி
நின்னையே நிழல் என்று!

நாவல்கள்:
உறங்குமோ காதல் நெஞ்சம்?
உன்னருகே நான் இருந்தால்…?
எங்கே அந்த வெண்ணிலா?
நீர்மூழ்கி நீரில் மூழ்கி…

ஒலிப்புத்தகங்கள்: (Audio Book)
மலரே காதல் மலரே…
நதியே காதல் நதியே..
இங்கேயும் ஒரு வெண்ணிலா

திரைப்படம் – திரைக் கதை வசனகர்த்தா.
சுகம் சுகமே
சிவரஞ்சனி
வேலி

மேடையேறிய நாடகம்: 
அன்னைக்கொருவடிவம், மனசுக்குள் மனசு.

மேடையேறிய சிறுவர் நாடகம்:
பொங்கலோ பொங்கல், தமிழா தமிழா, பேராசை.

சிறுவர் இலக்கியம்:
தமிழ் ஆரம் – காணொளி குறும்தட்டு
தமிழ் ஆரம் – சிறுவர் பாடல்கள் ஒலிவட்டு.
தமிழ் ஆரம் – பயிற்சி மலர் – 1-4
தமிழ் ஆரம் – சொல்தேடல் பயிற்சி நூல்.

ஆனந்தவிகடன் பவழவிழா மலரில் 25 பக்கங்களில் வெளிவந்த இவரது பெரியகதைக்குத் தமிழகத்தின் முன்னணி ஓவியர்கள் ஐவர் படம் வரைந்திருப்பது இதுவரை எந்த ஒரு எழுத்தாளருக்கும் கிடைக்காத பாக்கியமாகும்.
கனடா தமிழ் எழுத்தாளர் இணையச் செயலாளராகக் கடமையாற்றிய இவர் பீல் பிரஜைகள் சங்க உபதலைவராகவும், ஒன்ராறியோ தமிழ் ஆசிரியர் சங்கத் தலைவராகவும் இருக்கின்றார். இவரது முள்வேலி என்ற கதை வேலி என்ற பெயரிலும், சொல்லடி உன் மனம் கல்லோடி என்ற நாவல் சிவரஞ்சனி என்ற பெயரிலும் திரைப்படமாக்கப்பட்டுள்ளன. இவரது பல கதைகள் பிறமொழிகளில் மொழி மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றன.
நன்றி – குரு அரவிந்தன்(மின்னஞ்சல்:  kuruaravinthan@hotmail.com)

Sharing is caring!

Add your review

12345