எழுத்தாளர் சசிபாரதி

எழுத்தாளர் சசிபாரதி

ஈழத்து இலக்கிய வரலாற்றில் புனைகதையில் முடிசூடா மன்னனாக விளங்கிய சசிபாரதி என்றழைக்கப்படும் சபாரத்தினம் நல்லூர் பிரதேச செயலர் பிரிவில் உள்ள கந்தர்மடத்தை வாழ்விடமாகக் கொண்டவர். வீரகேசரிப் பத்திரிகையில் பணியாற்றிய இவர் யாழ்ப்பாணத்தில் அறுபதுகளில் ஆரம்பிக்கப்பட்ட பிராந்தியப் பத்திரிகையான ஈழநாடு வாரமலரின் துணை ஆசிரியர்களில் ஒருவராக விளங்கினார். இவர் வாரமலரை மிக அழகாக, பல்சுவை வடிவங்களாக வெளிவர உதவியதோடு பல எழுத்தாளர்களை கவிதையாளர்களை இப்பத்திரிகை மூலம் வளர்ச்சி காண வைத்தவர். தத்துவார்த்தமான கறுங்கதைகளை தனக்கே உரிய பாணியில் பத்திரிகைகளில் எழுதி வாசகர்களிடையே நன்மதிப்பைப் பெற்றவர். இவரின் கதைகள் தமிழிலும், ஆங்கிலத்திலும் நூலுருவில் வெளிவந்தன.

மனித சமுதாயத்தின் ஆபாசங்களையும், அவலங்கள், அங்கலாய்ப்புக்களையும் தனது சிறுகதை மூலம் வெளிப்படுத்தியிருக்கும் சசிபாரதி ”அசுரபசி”, ”கடன்காரி”, ”முதல் பரிசில் பெற்ற ஓவியம்”, ”பார்வை”, ”கடவுளும் மனிதனும்”, ”மனிதர்கள்”, ”பாவியும் கடவுளும்”, ”கோவிலும் சூரியோதயமும்”, ”குயிலின் ஓசை”, ”அமிழ்தம்” முதலான சிறுகதைகளை எழுதியுள்ளார். ”நினைப்பிற்கும் நிகழ்விற்கும் உள்ள முரண்பாடுகள்”, ”மனிதர்கள் மாத்திரமன்றி தெய்வங்கள்”, ”அஃறிணைப் பொருட்கள்” என்பனவும் இவர் எழுத்துக்களிலே தோற்றமெடுத்தன.

பாத்திரப் படைப்புக்கள் பயன்மிகு உண்மைகளை நீதியான கருவை, அழுத்தமுற எடுத்துக்காட்டுவனவாக இவர் படைத்துள்ளமை இவரின் தனித்துவத்தை விளம்பி நிற்கின்னது. பத்திரிகையாளனாகவும் இவர் பல்வேறு ஆக்கபுர்வமான நிகழ்வுகளை கட்டுரை வடிவில் ஈழநாடு பத்திரிகை மூலம் தந்துள்ளார். சசிபாரதி அவர்கள் யாழ் இலக்கிய வட்டத்தின் செயற்குழுத் தலைவராக இருந்து இலக்கிய வளர்ச்சிக்கு பாடுபட்ட ஒருவராவார்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடு

Sharing is caring!

Add your review

12345