எழுத்தாளர் தம்பு

எழுத்தாளர் தம்பு சிவா ஈழத்தின் யாழ்ப்பாணக் குக்கிராமமான இணுவிலில் 1944 இல் பிறந்தவர். 1970, 1971 இல் வெளிவந்த கற்பகம் சஞ்சிகையில் சிறப்பாசிரியராக இருந்து இலக்கியப் பணியாற்றியவர். அத்தோடு தொழிற்சங்கவாதியாக அடையாளம் காட்டிக்கொண்ட இவர் இடதுசாரிக் கொள்கையில் தீவிர பற்றுடையவராக இருந்து வருகின்றார்.

“காலத்தால் மறையாத கற்பக இதழ் சிறுகதைகள்” தொகுப்பின் தொகுப்பாசிரியராவார். தற்பொழுது பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதிவருகின்றார். இவரது “சொந்தங்கள்” என்ற முதற் சிறுகதைத் தொகுதியும், “முற்போக்கு இலக்கியச் செம்மல்கள்” என்ற கட்டுரைத் தொகுதியும் இலங்கை முற்போக்கு கலை இலக்கியப் பேரவையால் வெளியிடப்பட்டது.

 

Sharing is caring!

Add your review

12345