கணபதி படிப்பகம் – வல்வை

கணபதி படிப்பகம் - வல்வைஇன்று வல்வை நெடியகாட்டுப் பிள்ளையார் கோவிலின் வடக்கு பக்கத்தில் அமைந்திருக்கின்றது கணபதி படிப்பகம் – வல்வை. ஆரம்பத்தில் வல்வை வேம்படிச் சந்திக்கு அருகாமையில் சின்னக்கிளியப்பாவின் கார் கராச்சில் வேம்படி வாசிகசாலை என்ற பெயருடன் இயங்கி வந்தது. அந்த வாசிகசாலையை கொத்தியால் யூனியன் தொளிலாளர்கள் மிகவும் சிறப்பாக நிர்வகித்து வந்தனர்.
அறுபதின் நடுப்பகுதியில் தமிழ்நாட்டுக் கரையோர கிராமமான விழுந்த மாவடிக்கும் வல்வெட்டித்துறைக்கும் தினமும் படகுகள் வியாபார நிமித்தம் சென்று வந்துகொண்டிருந்தன. தமிழ்நாடு சென்று வருபவர்கள் அங்கிருந்து தமிழ்நாட்டு வாரச்சஞ்சிகைள் பலவற்றை கொண்டுவந்து வாசிகசாலையில் மக்கள் வாசிப்பதற்காக வைத்திருந்தார்கள். இதனால் இந்த வாசிகசாலையில் அதிக மக்கள் கூட்டம் சேர்ந்தது. இதனால் நெருக்கடி ஏற்பட்டதனால் மக்கள் மிகவும் சிரமப்பட்டார்கள். அந்த நிலையில் அன்றைய நிர்வாகத்தினர் ஒரு புதிய கட்டடத்தை கட்டுவதற்கு தீர்மானித்தனர்.
நெடியகாட்டு பகுதியைச்சேர்ந்த இளம் நாடகக் கலைஞர் ஒரு நாடகத்தை நடாத்தி அதன் மூலம் கிடைக்கும் நிதியை படிப்பகத்தின் கட்டட நிதிக்கு கொடுப்பதெனவும் முடிவு எடுத்தார்கள். அத்தோடு தங்களுடைய முடிவை அன்றைய நிர்வாகத்தினரிடமும் தெரியப்படுத்தினார்கள். நிர்வாகத்தினரும் அவர்களுக்கு நல்லாதரவு வழங்கினர். அப்போது உதயமானதுதான் கலைவாணி நாடகமன்றம். அவர்களால் ”தீர்ப்புக்கு முன்” என்னும் சமுகசீர்திருத்த நாடகத்தை வல்வை நெடியகாடு தெற்கு வீதியில் நடாத்தி முடித்து செலவுபோக மிகுதிப்பணத்தை அன்றைய கொத்தியால் யூனியன் தலைவரும் வேம்படி வாசிகசாலையின் தலைவருமான திரு.தெ.இலெட்சுமிகாந்தனிடம் ஒப்படைக்கப்பட்டது. பணம்கிடைத்த சில தினங்களில் கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு விட்டன. அன்றைய காலத்தில் கடல் வணிகம் சிறப்புற நடைபெற்று வந்ததால் கொத்தியால் யூனியன் தொழிலாளர்கள் தாராளமாக பணத்தினை கொடுத்து உதவியது குறிப்பிடத்தக்கது.
இப்படி கட்டடத்தை ஆரம்பத்திலிருந்து முன்னாள் நகரபிதா திரு.து.நவரெத்தினத்தின் சகோதரரரான திரு.து.சின்னராசா மேத்திரியாரும் அவருடன் வேலைபார்த்த அனைவரும் எந்தவித கூலியும் பெறாமல் சிரமதான மூலம் கட்டி முடித்தது குறிப்பிடத்தக்கது. திரு.ஐ.காத்தாமுத்து அவர்கள் படிப்பகத்தின் சன்னல் கதவுகளுக்குரிய மரங்களை கொடுத்துதவினார். வல்வை கெலியன்ஸ் நண்பர்கள் மின்குமிழ்களை அன்பளிப்புச் செய்தார்கள். அத்தோடு அப்பகுதி இளைஞர்கள் அனைவரும் அனைத்து வழிகளிலும் உதவிபுரிந்தது குறிப்பிடத்தக்கது.
வல்வை நெடியகாட்டுப்பிள்ளையார் கோவிலின் அருகாமையில் அமைந்துள்ளதால் அனைவரின் ஒருமித்த கருத்துடன் கணபதி படிப்பகம் எனப் பெயர் சூட்டப்பட்டது. தீர்ப்புக்குமுன் நாடகம் ஆறாம் மாதம் 1967ல் நடந்தது. மூன்று மாதத்தில் கட்டடம் முற்றுப்பெற்றது. ஊர்ப் பெரியவர்கள் ஒன்று கூடி நல்ல நேரத்தில் 14.09.1967ல் அன்றைய படடினசபைத்தலைவர் திரு.சி.இரத்தினவடிவேல் அவர்கள் திறந்து வைத்தார்கள்

நன்றி – தகவல் மூலம்http://nediyakadu.com இணையம்

Sharing is caring!

1 review on “கணபதி படிப்பகம் – வல்வை”

  1. thavarajah says:

    en palaya ninaivukalittku thirumpiya makilchi intha vaasikasaalai naan pala puththakankal padiththathittku mukkiya kaaranam nantri

Add your review

12345