கந்தரோடை விகாரை

தமிழ் மக்கள் மத்தியில் தமது பண் பாட்டுத் தொடர்சியைக் குறித்த மையத்தில் நிலை நிறுத்துவதற்கு வேண்டப்பட்ட மன உணர்வு உருவாக்கப்படுவதற்கும் வாய்ப்பில்லாதொழிந்தது. இவ்வாறான ஒரு பின்னணி யே இன்று ‘கிழக்காக மாயக்கை நீரேந்து பரப்பும் மக்கள் வாழ்வின் புராதன இரு மையங்களாக இருந்து வந்நதிருக்கின்றன. வழுக்கையாற்றுப் வடிநிலத்தினூடாக உள்வாங்கப்பட்ட பண்பாட்டுப் பங்களிப்புப் பற்றிய ஆய்வுகளில் ஆய்வாளர்கள் இன்னும் அக்கறை செலுத்தவில்லை. இருந்தாலும் கந்தரோடையி லிருந்தும் இதுவரையில் வெளிக்கொணரப்பட்ட தொல்லியல் எச்சங்கள் அத்துறை ஆய்வுகளில் முக்கியத்துவத்தை கோடிட்டுக்காட்டி நிற்கின்றன எனலாம். ஜீவனோபாயத்திற்கான உயிரோட்டமான மையங்களாக இயற்கையாக அமைந்த நன்னீர் நிலைகள் வரலாற்றுக்கு முற்பட்ட காலம்தொட்டே இருந்து வந்திருக்கின்றன. தொல்லியல் ஆய்வுகள் மூலம் பெறப்படுகின்ற சான்றுகள் இக்கருத்தினை உறுதிப் படுத்தியுள்ளன. அவ்வகையில் ‘மயோசின்” காலப்பகுதியில் உருவான யாழ்ப்பாண தீபகற்ப புவியமைப்பியலுடன் இணைந்த தோற்றம் பெற்ற வழுக்கையாற்றுப்பள்ளத் தாக்கின் இருமருங்கிலும் கோயிற்குடியிருப்புகளும், விவசாயக் குடியிருப்புகளும் தொடர்ச்சியான வளர்ச்சியோடு பண்பாட்டுக் கோலங்களை வெளிப்படுத்தியிருந்தன என்றால் அது மிகையாகாது. இக்குடிய
pருப்புக்கள் ஒரே சீராக இப்பள்ளத்தாக்கின் இருமருங்கிலும் வளர்சிசி பெற்றிருக்கவில்லை. சிலபகுதிகள் நகரரீதியாக வளர்ச்சியடை ந்திருந்தன. பெரும்பாலான குடியிருப்புக்கள் விவசாயக் கிராமியக் குடியிருப்புக்களாகவே இருந்திருக்கின்றன. கந்தரோடை அவ்வகையில் ஒரு நகரக்குடியிருப்பாகவும் வர்த்தக மையமாகவும் வளர்ச்சி பெற்றிருந்தமையை அங்கிருந்து பெற்றுக்கொள்ளப்படும் தொல் லியல் சான்றுகள் மூலமாக அறிந்துகொள்ள முடிகிறது. கந்தரோடை தொடர்பான ஆய்வின் பின்னணியிலே வழுக்கiயாற்றுப்பள்ளத் தாக்கினுடைய தொல்லியல் முக்கிய த்துவம் எதிர்காலத்தில் இன்றியமையாததாக ஆராயப்பட வேணடியதொன்றாகும். ஏனெனில் யாழ்ப்பாணத்தின் சமூக உருவாக்கம் பற்றிகற்போருக்கும்,ஆய்வு செய்வோரு க்கும் வழுக்கையாற்றுப் பள்ளத்தாக்கு வளமான சான்று வழங்கும் ஒரு மையமாக அமையும் என்பது அண்மைக்கால ஆய்வுகள் மூலம் தெரியவந்துள்ளது.

வழுக்கையாற்றுப் பள்ளத்தாக்குடன் இணைந்த வகையில் பல வணிக மையங்களும் தானியக்களஞ்சியங்களும், ஆலயங்களும் காணப்பட்டிருந்தன என்பதனை அண்மைக் காலத் தொல்லியல் மேலாய்வுகள் உறுதிப்படுத்தியுள்ளன. சதுர முறையிலும் காணப்படும் இந்நாணயங்களின் முற்பக்கத்தில் சூரிய உருவமும் அல்லது வண்டிற் சில்லு ஒன்றிலே விலங்கு ஒன்று இழுத்துச்செல்வது போன்ற உருவமும் காணப்படு வதனை அவதானிக்கலாம். ஒரு நாணயத்தில் சூரிய உருவம் மிகத்தெளிவாக தெரிகி ன்றது. அதில் சூரிய உருவத்தினை நோக்கி ஒரு விலங்கு வருவது போன்று அமைந்துள்ளது. இத்தகைய உருவங்களை தாங்கி, வெளியிடப்பட்ட இவ்வகையான நாணயங்களை வடகிழக்கிந்தியாவிலிருந்தும் தக்கண தென்னிந்தியப்பரப்பிலிருந்தும் ஆய்வாளர் பெற்றுள்ளனர். இருப்பினும் கந்தரோடையிலிருந்து கிடைத்தவற்றுள் நான்கு நாகவடிவம் பொறிக்கப்பட்ட வெள்ளி நாணயங்களாக இருப்பதும் இங்கு குறிப்பிடத்தக்க தாகும். இந்த வெள்ளிநாணயம் நாகவம்சத்தின் வெளியீடாகவே கொள்ளவேண்டிய ஒருநிலை எமக்கு ஏற்பட்டிருக்கிறது. நாகதீபத்தில் அரசாட்சி செய்த நாகதீப ராஜாவினுடைய வெளியீடுகளாக நாகசின்னம் பொறித்த இந்த வெள்ளிநாணயத்தினைக் கொள்வதில் தவறேதும் இருக்கமுடியாது என்றே கருதவேண்டியுள்ளது. கந்தரோடையிற் கிடைத்துள்ள இவ்வெள்ளி நாணயங்கள் தொடர்பான விபரணநோக்கு இவ் அத்தியாயத்தின் இறுதிப் பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.

வழுக்கையாறு தந்த வரலாற்று மூலங்களுள் எமக்கு தற்பொழுது சிறப்பாக கிடை த்திருப்பது தமிழ்பிராமிச் சாசனங்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டத் துண்டுகளாகும். தமிழ் பிராமி வரிவடிவங்கள் பொறிக்கப்பட்ட மட்பாண்டங்கள் பல்வேறு வகையைச் சேர்ந்த னவாக காணப்படுகின்றன. கறுப்பு, சிவப்பு மட்பாண்டச்சட்டிகள் (டீழறடள) இவற்றுள் மிகமிகப் பிரதானமானவையாகும். சிவப்பு வர்ணத்திலான பெரிய மண் பானைகளிலும் பிராமி வரிவடிவங்கள் பொறிககப்பட்டுக் கிடைத்துள்ளன. இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் விளைவாகக் கிடைத்த பிராமி வடிவங்களுள் ‘குணி” என்ற தமிழ் வாசகம் பொறிக்கப்பட்டுக் கிடைத்த மட்பாண்டத் துண்டு ஒன்று வரலாற்று முக்கியத்துவத்தினை வெளிப்படுத்துவதாக அமைகிறது. இவ் வாசகத்திற்காகப் பயன்படுத்தப்பட்ட பிராமி வரிவடிவம் தமிழ் நாட்டில் உள்ள புகலூர் தமிழ் பிராமிச்சாசன வரிவடிவினை ஒத்தமுறையில காணப்படுவது விசேடமாக நோக்க த்தக்கதாகும். வரிவடிவினையிட்டு எவருமே அதனை தமிழ்ப்பிராமி அல்ல என்று மறுக்க முடியாது. அத்தோடு இம் மட்பாண்டச் சாசனத்துடன் இணைந்த வகையில் கிடைத்த வேறு மட்பாணடங்களில் தமிழ் நெடுங்கணக்கிற்கே சிறப்பெழுத்தாக அமைந்த ‘ழ”கர ஒலிக்குரிய வரிவடிவமும் கிடைத்துள்ளது. மேலும்’ஈ”கார ஒலிக்குரிய தமிழ்ப்பிராமி வரி வடிவமும் கிடைத்துள்ளது. இன்
னும் மேலதிகமாக தமிழ்ப்பிராமி வரிவடிவங்களில் வழங் கிவந்த எண்முறைக்குரிய குறியீட்டுமுறையும் கிடைத்திருப்பது எம்மை வியப்பில் ஆழ்த் துகின்றது,தமிழகத்தில்ஓரிரு இடங்களிலேயே இவ்வகையான எண்முறை நிலவியிருப்பத ற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பது குறிப்பிடத்தக்கது இத்தகைய வரிவடிவ முறை க்குரிய காலப்பகுதியை கி.பி.1ம்,2ம் நூற்றாண்டுக் காலப்பகுதி எனக் கொள்ள முடியும்.

1980ம் ஆண்டில் யாழப்பாண பல்கலைக்கழக வலாற்றுத் துறையினர் ஆனைக்கோட்டையில் அகழ்வாராய்ச்சியில் சிவப்பு மட்பாண்டம் ஒன்றும் அதனுள் இருந்த முத்திரை மோதிரமும் எமது கைக்கு கிடைத்தன. பின்னர் பேராசிரியர் இந்திரபாலா அதைனை எம்மிடமிருந்து வாங்கி ஆராய்ந்த பின் ஊற்றுப்பேனாவுக்குரிய மையில் தேய்த்து ஒரு தாளில் அம் முத்திரையை பதித்தார். உடனே அத்தாளில் கலாநிதி ஜேமஸ்இரட்ணம். கலாநிதி இரகுபதி ஆகியோரால் எழுதி வெளியிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது. இன்று கந்தரோடையில் எமக்குக்கிடைத்த சிவந்த மட்பாண்டத்துண்டு ஒன்றில் ஓர் எழுத்தானது அன்று ஆனைக்கோட்டையிற் கிடைத்த ஈரின எழுத்து முத்திரையின் மேல் வரியில் பொறிக்கப்பட்டுக் காணப்படும் சிந்துவெளியின்(?)எழுத்தினை ஒத்திருப்பதனை ஒப்பிட்டு நோக்கிக்கொள்ள முடிகிறது அவ்வாறாயின் ஆனைக்கோட்டையிலிருந்து கந்தரோடை வரைக்குமுள்ள வழுக்கiயாற்றுப் பள்ளத்தாக்கில் சமகாலத்தில் அத்தகைய வரிவடிவங்களைக் கையாண்ட மக்ககள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பது தெளிவாகின்றது அல்லவா? கந்தரோடையில் கிடைத்த இந்த சிவப்பு வரிவடிவமானது அன்று கலாநிதி இரகுபதி குறிப்பிட்டது போன்று ‘கோ” என்பதனை உணர்த்துவதற்குப் பயன்படுத்தப்பட்ட முச்சூலக் குறியீடாக இருப்பது

கந்தரோடையில் உள்ள குறிப்பிட்ட மையத்தில் கிடைத்த இருவகையான முத்திரை பொறிக்கப்பட்ட மட்பாண்டங்களை இங்கு குறிப்பிடலாம். முதலாவது வகையானது ஒரு வெளிவட்டத்தினுள் அமைந்த நீள் வட்ட வடிவிலான – உருவம் பதித்த முத்திரையாகும்;. இரு வட்டங்களுக்கிடையே பிராமி எழுத்துக்கள் தெளிவற்ற முறையில் காணப்படுகின் றன. இவற்றுள்’ம”என்ற எழுத்து முத்திரையில் பதிந்துள்ளது. நடுவட்டத்தினுள் மைய த்தில் நாகத்தினது உருவம் பதிக்கப்பட்டுள்ளது. இரண்டாவது வகையான முத்திரையா னது வட்ட வடிவில் அமைந்துள்ளது. பிராமி எழுத்துக்கள் மிகவும் தெளிவாகப் பொறிக் கப்பட்டுள்ளன. நாகபாம்பினது உருவமும் தெளிவாக உள்ளது. இவ்விரு முத்திரை களின் பதிவுகளையும் ஆராயும் போது உலோகத்தினாலான முத்திரையிடும் கருவியே இங்கு பயன் படுத்தப்பட்டிருக்க வேண்டும் என்பதும் தெளிவாகின்றது.

வழுதி தந்த வரலாற்று மூலங்களுள் மிக முக்கியத்துவம் வாய்ந்த’சிவ”என்ற வாசகத்தினை கொண்ட சதுரமான செம்பு நாணய மானது சங்ககால வானிபத் தொடர் பினை கந்தரோடையுடன் உறுதிப்படுத்துவதற்கு உதவியுள்ளது. இந் நாணயத்தில் தமிழ் பிராமி வரிவடிவில் சிவ என்ற பெயர் பொறிக்க ப்பட்டுள்ளது.’வார்வை”நாணயமான இச் செம்பு நாணயம் கந்தரோடையில் குறிப்பிட்ட மையத்தில் மேற்பரப்பிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

3 reviews on “கந்தரோடை விகாரை”

  1. s. malar says:

    ungalathu muyatchi varavetka thakkathu

  2. நன்றி மலர்விழி

Add your review

12345