கனகசபை இராஜபுவனீஸ்வரன்

ஆறுமுகச்சட்டம்பியார், கந்தப்பாபிள்ளை சட்டம்பியார் மரபுவழிவற்த கனகசபைக்கும் வடிவழகம் அம்மையாருக்கும் சுதுமலையில் 07.08.1939 அன்று பிறந்தார். ஆரம்பக் கல்வியை சிந்மயபாரதி வித்தியாசாலையில் தொடங்கி கொழும்பில் சாகிராக் கல்லூரியிலும் அதனைத் தொடர்ந்து அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரியில் பட்டப்படிப்பை மேற்கொண்டபின் இலங்கை வங்கியில் கடமையாற்றி சிரேஷ்ட பிரதம முகாமையாளராக உயர்வு பெற்றார். அன்னார் சமயப்பணிகளும், சமூகப்பணிகளும் அளவற்ற முறையில் செய்தவர். விவேகானந்த சபை, கொழும்பு அகில இலங்கை இந்து மாமன்றம், உலக சைவப் பேரவை, திருக்கேதீஸ்வர ஆலய திருப்பணிச்சபை என்பனவற்றில் கௌரவ உயர் பதவிகளில் இருந்து அரும்பணிகள் ஆற்றினார். இவற்றைவிட அறநெறிப் பாடசாலை, திருமுறைகள் ஓதுவித்தல், புராணபடலங்கள், தலயாத்திரைகள் மேற்கொள்ளல், சிவதொண்டர் அணிசெயற்பாட்டு பணிகளையும் மேற்கொண்டார். விவேகானந்த சபை மூலம் சைவசமய பாடப் பரீட்சைகளை நடாத்தி கல்வி உலகில் பிரபல்யம் பெற்றார். இவரது சேவையில் விவேகானந்த சபையில் தொடர்ச்சியாக 35 வருடங்களுக்கு மேலாக கௌரவ செயலாளராக கடமையாற்றி ஒரு சாதனையைப் படைத்துள்ளார். இவ்வாறு சமய, சமூகப்பணிகளை மேற்கொண்டதால் சைவக் காவலர், திருவாவடுதுறை ஆதீனம் வழங்கிய சிவஞானச் செல்வர் போன்ற பல கௌரவப் பட்டங்கள் இவரை நாடிவந்தன. சமாதான நீதவானாக இருந்து பற்பல சமூகப்பணிகளையும் மேற்கொண்டார். பற்பல பணிகளையெல்லாம் செய்து பார்போற்ற வாழ்ந்த பண்பாளன் 03.04.2009 அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தா

Sharing is caring!

Add your review

12345