கலாகேசரி அ.தம்பித்துரை

கவின் கலைக்கோர் கலாகேசரி என்று போற்றப்பட்ட கலைஞர் அ.தம்பித்துரை அவர்கள். திருநெல்வேலியில் 1932ம் ஆண்டின் பிரபல ஆண்டின் சிற்பாசிரியர் வி.ஆறுமுகத்தின் மூத்த புதல்வராக பிறந்தார்.  எஸ்.ஆர்.கனகசபையின் “வின்சர் ஆட் கிளப்“பில் சித்திரம் பயின்று 1954இல் சித்திர ஆசிரிய தராதரப் பத்திரப் பரீட்சையில் சித்தியடைந்தார்.
1955இல் மகாஜனக் கல்லூரியில் சித்திர ஆசிரிய நியமணம் பெற்றார். கலாகேசரி அவர்கள் 1955இலிருந்து 1994இல் காலமாகும் வரை 39 ஆண்டுகள் குரும்பசிட்டி வாசியாகவே வாழ்ந்தவர். தனது சொந்த இடமாகக் குருப்மசிட்டியை கருதினார். குருப்மசிட்டியின் பொது வாழ்வில் தன்னை இணைத்துக்கொண்டார்; குரும்பசிட்டி சன்மார்க்க சபையின் தலைவராக இருந்து இலக்கிய, சமய கலைப் பணிகளை செய்தார்.
1968ஆம் ஆண்டு சித்திர வித்தியாதிகாரியாக நியமனம் பெற்ற தம்பித்துரை அவர்கள் மாவட்டம் முழுவதுமே ஓவியக்கலையை முன்னெடுக்க முயன்றுளைத்தார்; இலவசமாகத் தானே கற்பித்து ஊக்குவிப்பு செய்வதுடன் சித்திரத்தைப் பல்கலைக்கழகப் பாடநெறியாக்க வேண்டுமென்று குரல் கொடுத்து வந்தார். அது இன்று வெற்றி தந்துள்ளது. 1964இல் தனது தந்தையாரின் பெயரால் ஆறுமுகம் சிற்பாலயம் என்ற நிறுவனத்தைப் பதியு செய்து சிற்பக்கலையை முன்னெடுத்தார். குரும்பசிட்டி அம்மன்,  நந்தாவில் அம்மன்,  பண்ணாகம் முருகமூர்த்தி,  வண்ணார்பண்ணை விசுவேச விநாயகர்- ஐயனார் ஆலயங்களின் சித்திரத்தேர்களை நிர்மானித்தார். நந்தாவில் அம்மன் தேர் நிறுவிய புதுமையைப் பாராட்டிக் “கலாகேசரி” என்னும் பட்டம் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.
1970களில் ஆரம்பத்தில் “குரும்பசிட்டி கலாகேசரி கலாலயம்” என்ற நிறுவனத்தை அமைத்து அதன் பேரில் சுட்க்ஹுமலை அம்மன்,  குப்பிளான் கற்பக விநாயகர்,  மாத்தளை முத்துமாரியம்மன்,  தெல்லிப்பளை துர்க்கையம்மன்,  புற்றளை விநாயகர்,  கொக்குவில் சிவசுப்ரமணியர்,  கோண்டாவில் சிவபூதராயர், சுன்னாகம் சிவன்,  இணுவில் செகராசகேகரப் பிள்ளையார் ஆலயங்கள் முதலானவற்றை தனித்தனி கலை அம்சங்கள் நுணுக்கங்களோடு தேர்களை நியமித்தார். இவற்றோடு மஞ்ஜம், சப்பரம், கேடகம், வாகனம் போன்றவற்றை வகை தொகையாகச் செய்து ஆலயங்களுக்கு வழங்கினார். பாடசாலையில் சிறுவர் சித்திரத்தை ஊக்கு விப்பதுடன், வர்ண காகித ஒட்டு வேலைகள், கழிமண்,  மணல், பசை, மரம், சிளகுச் சித்திரங்களை ஆசிரியர்களுக்கு அறிமுகம் செய்தார்.பரம்பரை சிற்ப ஓவியக் கலைஞராகத் திகழ்ந்தார் கல்வியுலகில் தன்னிகரற்றவராக விளங்கினார்.
இவரிக்கு வழங்கப்பட்ட விருதுகள் க்லாகேசரி,  கலாபூசனம்,  இராஜஸ்தபதி,  இரதச்சக்கரவர்த்தி, சிற்ப்பக்கலாதிலகம் போன்றனவாகும். சிற்பம்,  சித்திரம் சம்பந்தமாக பல நூல்களையும் எழுதினார் இரசிகமணி கனகசெந்திநாதன் இவரைப்பற்றி கவின் கலைக்கோர் கலாகேசரி என்னும் நூலை எழுதியுள்ளார்.

நன்றி குரும்பசிட்டி இணையம்

Sharing is caring!

Add your review

12345