பேராசிரியர் சிவலிங்கராஜா

பேராசிரியர் சிவலிங்கராஜா

சிறந்த பேச்சாளரும் தமிழ் அறிஞருமான பேராசிரியர் சிதம்பரப்பிள்ளை சிவலிங்கராஜா (தோற்றம் – 16.12.1945) அவர்கள் கரவெட்டியை பிறப்பிடமாகவும், பிள்ளையார் வீதி திருநெல்வேலியை வாழ்விடமாகவும் கொண்டவர். பல்கலைக்கழகம் புகுமுன்பே வாணி கலைக்கழகத்தில் தமிழை மரபுவழி கற்றவர். வடமராட்சி தந்த தமிழ் அறிஞர்களுள் ஒருவரான பண்டிதர் க. வீரகத்தியிடம் தமிழ் பயின்றார்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்களான சு. வித்தியானந்தன், க. கைலாசபதி, கா. சிவத்தம்பி, அ. சண்முகதாஸ் முதலிய ஆளுமைகளால் புடமிடப்பட்டவர். யாழ் பல்கலைக்கழகத்தில் சிறப்புப் பட்டதாரியாக முதல் பிரிவில் தேறிய இவர் அப் பல்கலைக்கழகத்திலேயே கலாநிதிப் பட்டத்தையும் பெற்ற தற்போது யாழ் பல்கலைக்கழக தமிழ் துறை தலைவராக விளங்குகின்றார்.

ஈழத்து இலக்கியம்” இவருடைய சிறப்புத் துறையாகும். “வடமராட்சியின் கல்விப் பாரம்பரியமும் இலக்கிய வளமும்“, “வித்துவ சிரோமணி கணேசையரின் வாழ்வும் பணியும்”, “சி. வை. தாமோதரம்பிள்ளை வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம்”, “தமிழியல் கட்டுரைகள்”, “ஈழத்து இலக்கிய செந்நெறி”, யாழ்ப்பாணத்து வாழ்வியல் கோலங்கள்”, யாழ்ப்பாணத்து தமிழ் உரை மரபு”, “19 ம் நூற்றாண்டில் யாழ்ப்பாணத்துத் தமிழ் கல்வி” ஆகிய ஆய்வு நூல்களை எழுதியுள்ளார்.

எழுபதுகளில் பல கவியரங்குகளில் முத்திரை பதித்த இவர் “சொல்லினால் ஒரு மாளிகை” என்ற கவிதைக் காரருக்கு சொந்தக்காரர். ஐம்பதுக்கு மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகளை எழுதியுள்ள பேராசிரியர் சிவலிங்கராஜா இந்தியா, கனடா, இங்கிலாந்து ஆகிய நாடுகளுக்கு தமிழ் இலக்கிய நாயகனாக உலா வந்தவர். உலகத் தமிழியல் ஆய்வுக் கருத்தரங்குகள்   பலவற்றிலே கலந்து கொண்டுள்ளார். இவருடைய மேடைப்பேச்சுக்கள் மிகவும் வான்மை நிறைந்தவை. அவரது பேச்சில் சிலேடையும், நகைச்சுவையும் அதேநேரத்தில் மிகவும் ஆழமான கருத்தும் நிறைந்திருக்கும். வடமராட்சி பெற்றெடுத்த தமிழ் அறிஞர்களுள் மிகச் சிறந்தவராகப் போற்றப்படுபவர்.

By – Shutharsan.S

நன்றி- தகவல் மூலம் – நல்லூர் பிரதேச கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர் – 2009 வெளியீடுகள்

Sharing is caring!

2 reviews on “பேராசிரியர் சிவலிங்கராஜா”

  1. “யாழ்ப்பாணத்து தமிழ் உரை மரபு” என்பது ஈழத்துத் தமிழ் உரை மரபு என்பதாக மாற்றப்படவேண்டும். தவிரவும் சுன்னாகம் அ. குமாரசுவாமிப்புலவர் வாழ்வும் பணியும் என்றதொரு தலைப்பிலும் எஸ்.சிவலிங்கராசா அவர்களின் புத்தகம் ஒன்று உள்ளதாக ஞாபகம்.

  2. நிச்சயமாக, இதை தொகுத்து வழங்கியிருந்த கலாச்சார உத்தியோகத்தரிடம் கலந்தாலோசித்து மாற்றங்களை விரைவில் செய்கிறேன்.
    நன்றி.

Add your review

12345