கலாபூஷணம் அப்பாத்துரை சிறீரங்கம்

இவர் 1928.04.22 ல் மயிலங்கூடல், இளவாலையில் பிறந்தார். தற்போது கொழும்பில் வசித்து வருகிறார். இலக்கியத்துறையில் நாட்டம் கொண்ட காரணத்தினால் பாடசாலையில் படிக்கின்ற காலத்திலிருந்தே கவிதைப் போட்டியில் பங்குபற்றி தனது திறமையை வெளிக்காட்டியவர். தனது கலைச்சேவையை 1950 இல் இருந்து பணியாற்றத் தொடங்கினார்.

இவர் ஆற்றிய சேவைகளாக 1998 இல் கொழும்பு கொட்டாஞ்சேனை அருள்மிகு வரதராஜ விநாயகர் இரட்டை மணிமாலை, 2001 ல் கல்முனை சாந்தாங்கேணி சதுக்கம் அருள்மிகு சந்தான ஈஸ்வரர் திருவூஞ்சல், கொழும்பு கொட்டாஞ்சேனை வரதராஜ விநாயகர் சதகம், 2002 ல் யாழ் கீரிமலை நகுலேஸ்வர வரலாறும் அருள்மிகு நகுலேஸ்வரர் மணிமாலையும், 2004 ல் இளவாலை நாதோலை அருள்மிகு முத்துமாரியம்பாள் திருவூஞ்சல் போன்ற பல கவிதை நூல்களையும், நற்சிந்தனைகள், அமுதமொழி, மகத்துவ விரதங்கள், சைவ கமய அபரக்கிரியை விளக்கம் போன்ற பல உரைநடை நூல்களையும், மழலைச் செல்வம்,  மழலை முத்துக்கள், மழலைப் பாமலர்கள், மழலையர் பா அமுதம், போன்ற பல சிறுவர் பாடல் தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டார்.

அச்சேவையை பாராட்டி ”கலாஷணம்” எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதுடன் ”அமுதமொழி” என்னும் நூலிற்கு வடக்கு கிழக்கு சாகித்திய மண்டல விருதும் கிடைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

Sharing is caring!

Add your review

12345