கவிஞர் செ.கதிரேசப்பிள்ளை

அளவெட்டியிற் பிறந்த இவர் மகாஐனாக் கல்லூரியின் புகழ்பூத்த ஆசிரியராக இருந்து பல அறிஞர்களை உருவாக்கியுள்ளார். கவிஞர், நூடக ஆசான், சொற்பொழிவாளர், புராணபடன விற்பன்னர் எனப் பல்துறைத் திறமைகள் வாய்க்கப் பெற்றவர்.

தொடர்ந்து ஐந்து ஆண்டுகள் கலைக் கழக நூடகப் போட்டியில் முதற்பரிசு பெற்ற இவரது நாடகங்கள் “பாரதம் தந்த பரிசு” எனும் பெயரில் 1980ஆம் ஆண்டு நூலுருவில் வெளிவந்தது.
தமது தாயின் நினைவாக “தாய்” எனும் நூலை 1977 .ல் வெளியிட்டார்.
பக்தி நல மேம்பாடுள்ளவராதலாற் பல தெய்வங்கள் மேல் பதிகங்கள், இரட்டை மணிமாலை, திருப்பள்ளி எழுச்சி, திருத்தலவெண்பா, ஊஞ்சல் முதலான நூல்களை எழுதியுள்ளார்.

வரத்தலம் கற்பகவிநூயகர் இரட்டைமணிமாலை (1974), தவளகிரி முத்துமாரியம்மை திருப்பள்ளி எழுச்சி, வீரகத்திவிநூயகர் திருத்தல வெண்பா (1983) என்பன சிலவாகும்.

இவரது கவிதைகள் “கதிரேசன் கவிதைகள்” எனும் பெயரில் நூலுருப்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring!

Add your review

12345