கவிஞர் தம்பிராசா துரைசிங்கம்

கவிஞர் தம்பிராசா துரைசிங்கம் அவர்களின் பிறப்பு 04.09.1939. புங்குடுதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் இல.70/1 வைமன் வீதி, நல்லூர், யாழ்ப்பாணத்தை வாழ்விடமாகக் கொண்டவர். தற்போது கொழும்பில் தற்காலிகமாக வசித்து வருகிறார். குவிதை, சிறுவர் இலக்கியம், பாடப் புத்தகம் எழுதுதல் ஆகிய துறைகளில் ஈடுபாடு கொண்டு விளங்கி வரும் இவர் தன் சகோதரரான நாவேந்தன் வழியில் ஈழத்து இலக்கிய உலகிற்குள் காலடி எடுத்து வைத்தவர்.

கவிஞர் தம்பிராசா துரைசிங்கம்

சிறுவயது முதலே கவிதை, சிறுவருக்கான இலக்கியம், கட்டுரை ஆகியவற்றை ஈழத்து முன்னனிப் பத்திரிகைகளான வீரகேசரி, தினகரன், சுதந்திரன் ஆகிய பத்திரிகைகளிலும் சஞ்சிகைகளிலும் எழுதி வருகிறார். இவர் எழுதிய நூல்களில் இலங்கை அரசின் சாகித்திய மண்டலப் பரிசு “குழந்தை பாடல்கள்” நூலுக்கு 1989 ம் ஆண்டு கிடைத்தது. “பாட்டுப் பாடுவோம்” என்ற இவரின் நூலுக்கு 1997ம் ஆண்டு வடக்கு கிழக்கு மாகாண கல்வி, கலாச்சார அமைச்சின் பரிசு கிடைக்கப்பெற்றது. 1998ம் ஆண்டு “பாடுபாப்பா” நூலுக்கும் பாப்பா பாட்டு நூலுக்கும் 2000ம் ஆண்டு பரிசு வழங்கப்பட்டது.
இந்து கலாச்சார அமைச்சினால் 1990ம் ஆண்டு “இலக்கிய கலாவித்தகர்” என்னும் பட்டம் வழக்கிக் கௌரவிக்கப்பட்டுள்ள இவர் பல பாட நூல்களையும் எழுதியுள்ளார். ஆசிரியராக, அதிபராக, மாவட்டக் கல்வி பணிப்பாளராக இருந்து ஓய்வு பெற்றுள்ள துரைசிங்கம் அவர்கள் ஈழத்து தமிழ் இலக்கிய வரலாறு, பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள், அபிராமி அந்தாதி உரை, தமிழ் இலக்கிய களஞ்சியம் ஆகிய நூல்களையும் எழுதி வெளியிட்டுள்ளார். ஈழத்து இலக்கிய வரலாற்றில் சிறுவர் இலக்கியம் படைத்தவர்களில் மிக முக்கியமான ஒருவராக விளங்கினார். இலக்கியம் படைக்கும் போது அந்த இலக்கிய வெளிப்பாடுகளால் இளைய சமுதாயத்தினர் பயன்பெற வேண்டும். அவ்வாறான இலக்கியப் படைப்புகளை இம்மண்ணில் இவர் இவர் படைத்துள்ளார். இக்கலைஞர் யாழ் இலக்கிய வட்டத்தின் ஊடாக மறைந்த தன் சகோதரன் நாவேந்தன் நினைவாக வருடாவருடம் சிறந்த சிறுகதை நூலுக்கான பரிசினை வழங்கி வருகிறார்.

By – Shutharsan.S

நன்றி- மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர்.

Sharing is caring!

Add your review

12345