கவிஞர் நீலாபாலன்

கவிஞர் நீலாபாலன்

14.04.1948 இல் பிறந்த நல்லதம்பி பூபாலரத்தினம் எனும் இயற் பெயரையுடையவரும் கல்முனைப் பூபால், நீலாபாலன், பாலா, எரியீட்டி, கவிஞானசேகரி, கல்முனைக் கவிராயர் என விரியும் புனைபெயருடையவருமான இவர் கிழக் கிலங்கையின் கல்முனை பிரதேசத்தைச் சேர்ந்த வராயிருப்பினும், நீண்ட காலமாக வெலிமடை எனும் இடத்திலேயே வசித்துவருகின்றார்.
சுவாமி விபுலாநந்தர், புலவர்மணி, பெரியதம்பிப் பிள்ளை ஆகியோர் கல்வி கற்ற கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையே இவரையும் எமக்கு இனங்காட்டியது.
பாடசாலைக் காலத்தில் சிறந்த பேச்சாளராக இருந்த இவர் கல்லூரியில் “தமிழோசை” என்ற கையெழுத்துப் பத்திரிகை ஆசிரியராகவும் முத்தமிழ் மன்றத் தலைவராகவும் இருந்துள்ளார்.
கவிஞராக மட்டுமல்லாது 15 நாடகங்களுக்கு மேல் எழுதி, இயக்கி, நடித்து மேடையேற்றியுள்ளார். அதில் நிழல்கள். சிந்தனைச் சிலை, திருப்புமுனை, மாமனார் பறந்தார் என்பன குறிப்பிடத்தக்கன.
கவிஞர்களான நீலாவணன், பாண்டியூரான் ஜீவா, ஜீவரத்தினம், மருதூர்க் கொத்தன், போன்றவர்களோடு ஒன்றிப்பழகக் கூடிய வாய்ப்பும், கவிதை சம்பந்தமான நுணுக்கங்களையும் கற்றுக் கொள்ளக் கூடிய கிடைத்ததனால் என்னால் பண்பட முடிந்தது என அந் நாட்களை பசுமையாக நினைவு படுத்துகிறார் நீலாபாலன்.
மரபுக்கவிதையா புதுக்கவிதையா நீங்கள் எழுதுவது எனக் கேட்டபோது நீலாபாலன் எழுதுவது கவிதைகள் புன்முறுவலுடன் கூறுகிறார்.

பூபால் கவிதை புனைவான் அவன் கவிதை சாவாத பேறுடையதாம் ” என மறைந்த கவிஞர் நீலாவணன் சாற்றுறுதி செய்திருப்பதற்கு மேல் கவிஞரின் கவிதை பற்றி பிறிதொன்றும் கூற வேண்டிய அவசியம் ஏற்படவில்லை.
இவரது எழுத்துப் போலவே இவரது கவிதைப் பொழிவும் சிறப்பாகவே இருக்கும். வானொலியில் இடம்பெற்ற “பௌர்ணமி” கவியரங்கொன்றில் இவரது பொழிவில் லயித்துப் போன இலங்கை வானொலி தமிழ்ப் பகுதிப் பொறுப்பாளர் திரு.வி.என்.மதியழகன் அவர்கள் 1990 இல் வானொலியில் கவிதை சம்பந்தமான ஒரு நிகழ்ச்சியை நடத்தும்படி கேட்டுக் கொண்டதற்கிணங்க நீலாபாலனால் வானொலியில் ஆரம்பிக்கப்பட்டதே “கவிதைக் கலசம்
இது வரை 75 கவியரங்குகளில் பஞ்கேற்றுள்ள இவர் வானொலியில் மட்டும் 12 கவியரங்குகளைத் தரைமை தாங்கியிருக்கின்றார்.
அண்மையில் “இலந்தைப்பழத்துச் சிறுபுழுக்கள்” கவிதைத் தொகுதியூடு மக்கள் மனதை வென்ற இவரது இலக்கிய சேவையைக் கருத்திற் கொண்டு பின்வரும் அமைப்புக்கள் விருதுகளையும் கௌரவங்களையும் வழங்கியுள்ளன.

1972- “பாவரவு” (இளம் எழுத்தாளர் மன்றம்)
1977- “கவிதை” வித்தகன் (வெலிமடை இலக்கிய வட்டம்)
1991- “கவிமணி” (ஊவா மாகாண சாகித்திய விழா)
1993- “தமிழ் மணி” (நோர்வூட் இலக்கிய விழா)
1996- “கவி மாமணி” (பண்டாரவளை கவிதை பெருவிழா)
2003- “கவிதைப்பரிதி” (ஊவா சாகித்திய விழா)
2005- கலாபூசணம் (இலங்கை அரசு)

எனினும் தன் படைப்புகளே தன்னை இனங்காட்டவேண்டும் என்பதைத் தனது கொள்கையாக வைத்திருக்கிறார்

குறிப்பு : இவரது கவிதைத் தொகுப்புகள்

1. இலந்தைப் பழத்துப் புழுக்கள்- 2012

2. கடலோரத் தென்னைமரம் – 2013.03.31

 
 

By – Shutharsan.S

Sharing is caring!

Add your review

12345