கவிஞர் மகாலிங்கசிவம் பார்வதிநாதசிவம்

கவிஞர் மகாலிங்கசிவம் பார்வதிநாதசிவம்

கவிஞர் மகாலிங்கசிவம் பார்வதிநாதசிவம் அவர்கள் ஈழத்துத் தமிழ் பத்திரிகை உலகில் தனது மனிதநேயக் கவிதைகளை காலம் காலமாக எழுதிவரும் இக்கவிஞர் மரபுவழிக் கவிஞர்களில் ஒருவராவார். வலிகாமம் வடக்கு மாவிட்டபுரத்தை பிறப்பிடமாகக் கொண்ட இவர் சம்பியன் லேன் கொக்குவிலில் வாழ்ந்து வருகிறார். 1955ம் ஆண்டு முதல் தன் இலக்கியப் பணியை ஆரம்பித்தவர். இன்றுவரை பணியைத் தொடர்ந்து வருகிறார். காலத்தால் அழியாத பல குறுங்காவியங்களை பத்திரிகையில் எழுதியுள்ள இவர் சிலகாலம் ஆசிரியப் பணியாற்றியவர்.
பண்டிதமணி கணபதிப்பிள்ளை, இலக்கண வித்தகர் நமசிவாயம் ஆகியோரைத் தன் இலக்கிப் புலமைக் குருவாக ஏற்றுக்கொண்டவர். தேன்னிந்திய அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கற்றுப் புலவர் பட்டம் பெற்றுள்ள இப்பெரியார், இலக்கிய உலகில் நன்றாக தடம் பதித்தவர். இவரின் தேவை அறிந்த ஈழநாடு, உதயன், முரசொலி ஆகிய பத்திரிகைகள் இவரைத் தமது பணியில் அமர்த்தின. இங்கிருந்து செயற்பட்ட அவர் பல இளங்கவிஞர்களின் படைப்புகளை திருத்தம் செய்து பத்திரிகைகளில் வெளிவர உதவி புரிந்தார்.

காதலும் கருணையும், இருவேறு உலகம், இரண்டு வரம் வேண்டும், இன்னும் ஒரு திங்கள், பசிப்பிணி மருத்துவன், மானங்காத்த மறக்குடிவேந்தன், தமிழ்செல்வம்

ஆகிய நூல்களை எழுதியுள்ள இக்கவிஞர் ஈழத்து இலக்கியப் பரப்பில் இன்றுவரை நினைவில் கொள்ளப்படும் குருமணி மகாலிங்கசிவம் அவர்களின் மகன் ஆவார். சிறந்த கட்டுரையாளரான இவர் தமிழ் மக்களுக்காக பல அரிய கட்டுரைகளையும் எழுதியுள்ளார். இப்புலவரின் பிள்ளைகளான மகாலிங்கசிவம், இளங்கோ, பாலமுரளி ஆகியோர் புலரைப் போலவே அறிவிலும் அடக்கத்திலும் பிறருக்க உதாரணமாக விளங்கி வருகிறார்.
தேன்னிந்திய புரட்சிக் கவிஞர் பாரதிதாசனுடன் நெருங்கிப் பழகிய நண்பரான இவர் அங்கிருந்த காலத்தில் அவருடன் இணைந் பல இலக்கியப் பணிகளை மேற்கொண்டார். நாவலர் பெருமானின் தமிழ்நாடு சிதம்பரம் சைவப்பிரகாச வித்தியாசாலையின் தலைமை ஆசிரியராகவும் இவர் இருந்துள்ளார். ஈழத்தின் வளமானதொரு இலக்கியப் பாரம்பரியத்தின் வழித்தோன்றலான இக்கவிஞர் வித்துவசிரோன்மணி பொன்னம்பலம் பிள்ளையிடம் “உரையாசிரியர்” என்ற பட்டத்தை பெற்றார். அமரரான சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி அவர்களால் “இலக்கிய மேதை” என்னும் பட்டத்தை இவர் பெற்றுக் கொண்டார். தனது தள்ளாத வயதிலும் இன்றுவரை இலக்கியப் பணியாற்றி வரும் கவிஞர் இவரென்பது குறிப்பித்தக்கது.

By – Shutharsan.S

நன்றி- மூலம்- கலாச்சாரப் பேரவை, பிரதேச செயலகம், நல்லூர்.

Sharing is caring!

Add your review

12345