காரைநகர் ஐயனார் கோயில்

காரைநகர் ஐயனார் கோயில்

காரைநகர் ஐயனார் கோயில் ஆனது வரலாற்றுத் தகவல்களின்படி காரைநகரில் முதன் முதலில் கட்டப்பட்ட ஆலயம் இதுவாகும். 7 நிலைக்கோபுரங்கள், 3 வீதிகள் கொண்டதாக இந்தக் கோயிலை குலக்கொட்ட மன்னன் கட்டினான் என வரலாறு கூறுகிறது.
அவ்வாறாக பிரமாண்டமாக இருந்த கோயிலை இடிக்கவந்த போர்த்துக்கேயர்களும்(1618), ஒல்லாந்தர்களும்(1658) பலதரப்பட்ட இடையூறுகளை எதிர்கொண்டு, கோயிலை இடிக்கமுடியாது போனதாக கர்ண பரம்பரைக் கதைகள் உள்ளன. பின்னர் மீண்டும் வந்த ஒல்லாந்தர் இக்கோயிலை இடித்தார்கள். கோயிலை இடித்த கற்களை கொண்டே ஒல்லாந்தர்களின் கற்கோட்டை கட்டப்பட்டது. அப்போது கோயிலின் விக்கிரகங்கள் கிணற்றுக்குள் போடப்பட்டன. ஐயனார் விக்கிரகம் மட்டும் ஒரு அன்பரால் காப்பாற்றப்பட்டு தின்னபுரத்தில் உள்ள பள்ளம் ஒன்றில் பிடப்பட்டது. பிற்காலத்தில் அது தெய்வக்குறிப்புக்கேற்ப தோண்டி எடுக்கப்பட்டு தற்போது திண்ணபுரம் சிவன் கோயிலில் (ஈழத்து சிதம்பரம்) பிரதிட்டை செய்யப்பட்டு வழிபடப்படுகிறது.
பின்னர் ஏறத்தாழ 500 ஆண்டுகளின் பின்னர் ஐயனார் கோயிலானது ஊர்மக்களின் பெருமுயற்சியால் கட்டப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டு இரதோற்சவத்துடன் பத்துநாள் மகோற்சவத்துடன் சிறப்பாக வழிபடப்படும் கோயிலாக உள்ளது.
வியாவில் ஐயனார் ஆலயத்தின் சமூகப்பணிகள் முக்கியமானவை. ஆலயச் சூழலில் பசுமாடுகள் வளர்க்கப்பட்டு பஞ்சகவ்வியங்களும் ஆலயத் தேவைக்கு மட்டுமன்றி, அடியவர்கள், ஏனைய ஆலயங்களின் தேவைகளுக்கும் வழங்கப்படுகின்றன. வறிய மானவர்களுக்கு உதவுதல், புற்றுநோயாளருக்கு சத்துணவுப் பொதிகள் வழங்குதல் போன்ற பல சேவைகள் செய்யப்படுகின்றன. ஆலயச் சூழலிலேயே பல நூல்களோடு நவீனமயப்படுத்தப்பட்ட நூலகமானது பல்லூடக மற்றும் கணனி வசதிகளோடு இயங்குகிறது. (கணபதீஸ்வரக் குருக்கள் நூலகம்) அத்துடன் கணினிப் பயிற்சியும் மானவர்களுக்கு வழங்கப்படுகிறது.

நன்றி – மூலம்- ஊர்ப்பக்கம் இணையம்

Sharing is caring!

Add your review

12345