குதிரை லாயங்கள்

குதிரை லாயங்கள்

குதிரை லாயங்கள் ஒல்லாந்தர்களால் குதிரைகள் கட்டுவதற்காக கட்டப்பட்ட பல தூண்கள் இன்றும் சாறாப்பிட்டி பகுதியில் காணப்படுகின்றன. இவை பல நூற்றாண்டுகளாகியும் முற்றாக அழிந்து விடாமல் இன்னும் நிமிர்ந்த நிலையில் காடசியளிக்கின்றன. இவை குதிரை லாயங்கள் என அழைக்கப்படுகின்றன.

நெடுந்தீவு செல்வோரை கவரும் விடயங்களில் முக்கியமான இன்னுமொரு விடயம் குதிரைகளுக்கான லயன்களாகும்.ஒரு சுற்றுலா மையமாக காட்சியளிக்கும் இத் தீவில் அனைவரையும் ஈர்த்தவைகளில் குதிரைகளும் ஒன்றா கும்.
இலங்கைக்கு இற்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே மேற்காசியாவில் இருந்தும்,வட இந்தியாவில் இருந்து குதிரைகள் கொண்டு வரப்பட்டதற்கு ஆதாரங்கள் காணப்படுகின்றது.

யாழ்பாண அரசு காலத்தில் தென்னிந்தியாவிற்கு இலங்கையில் இருந்து யானைகள் கொண்டு செல்லப்பட்டு பிற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.அதற்கு பதிலாக அங்கிருந்து குதிரைகள் யாழ்பாணத்திற்கு கொண்டு வரப்பட்டதற்கு பல ஆதாரங்கள் காணப்படுகின்றது.
ஆனால் ஒல்லாந்தர் ஆட்சியில் படைநடவடிக்கைகளுக்கும், நீர்வாக தேவைகளுக்கும் பயன்படுத்தப்பட்டதால் முன்னரை விட குதிரைகளின் தேவைகள் அதிகமாக காணப்பட்டன.
இவ்வாறு கொண்டுவரப்பட்ட குதிரைகளை வளப்பதற்கு ஏற்ற இடமாக நெடுந்தீவு இருந்திருக்கலாம்

குதிரை லாயங்கள்அதற்காக அவற்றை பராமரிப்பதற்காக கட்டப்பட்ட குதிரை லாயன்களே தற்போது அழிவை எதிர்நோக்கியுள்ளது எனலாம்.சுமார் 300 மீற்றர் நீளத்திலும் 50 மீற்றர் அகலத்திலும்அமைக்கப்பட்ட இவ்லயன் பல குதிரைகளை பராமரிக்கக்கூடிய இட வசதிகளைக் கொண்டதாக காணப்படுகிறது.அவற்றை பாராமரிக்க அருகில் நிர்வாகக் கட்டிடமும் காணப்படுகிறது.
இக் கட்டிடப் பகுதியொன்றே நெடுந்திவில் ஒல்லாந்தர் ஆட்சியின் போது நெடுந்தீவு எவ்வளவு முக்கியம் வாய்தது என்பதை உணர்த்துகின்றது.அவர்கள் ஆட்சியின் போது முக்கியம் பெற்ற குதிரை வளர்ப்பு தற்காலத்திலும் அவர்களது சான்றை பறைசாற்றி நிற்கின்றது எனலாம்.இதனை விட அங்கு உலவித் திரியும் குதிரைகளும் எமக்கு ஆதாரப்படுத்தி காட்டுகிறது;

நெடுந்தீவு சாராப்பிட்டி

நெடுந்தீவில் சாராப்பிட்டி என்றவிடம் முக்கியமானதாகும். நல்ல தண்ணீர் இங்குதான் கிடைக்கின்றது. ஆடுகால் துலா மூலம் கிணற்றிலிருந்து இங்கு தண்ணீர் கிடைக்கின்றது. மிகப்பழைய காலக்கிணறு இங்குள்ளது. இங்கிருந்து தண்ணீர் தீவு முழுவதும் இன்று குழாய் வழியே வழங்கப்படுகின்றது. இதற்கு வடக்கே சுண்ணாம்புக் கற்றரையில் ஒரு பெரிய பாதம் பதிவாகிவுள்ளது. கரைசலினால் இயற்கையாகத் தோன்றிய வடிவம் இதுவாகும். இங்கு குதிரை லாயம் இருந்ததென்பதற்கு அடையாளமுள்ளது. பிரித்தானியனான நோலானால் அமைக்கப்பட்ட பழைய லாயத்தின் கட்டடத் தூண்களை இங்கே காணலாம்.

 

 By – Shutharsan.S

நன்றி – நெடுந்தீவு இணையம்

Sharing is caring!

Add your review

12345