குரும்பசிட்டி பண்டிதர் வ.நடராசன்

பழந்தமிழ்ப்பேரறிஞர். ஈழகேசரிப்பொன்னையாவின் திருமகள் அழுத்தகப்பாடநூல்கள் வரிசையில் பல செந்தமிழ் நூல்களை எழுதி ஒரு தலைமுறையின் தமிழ் அறிவை வளம்படுத்திய பெருமைக்குரியவர்.

நூவலர் வழிவந்த வித்துவசிரோமணி கணேசையர் முதலான தமிழ் அறிஞர்களிடம் பயின்ற இவர் தமிழறிஞர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
இவரது நூல்கள் செந்தமிழ்வளமும், இலக்கிய சுவையும், தூயஇனிய வசன நடையும் வாய்க்கப்பெற்றவை. ”சகுந்தலைசரிதை” இதற்கு எடுத்துக்காட்டாகும்.
இவர் கடைசியாக எழுதி வெளியிட்ட நூல் ”இறைவன் ஒருவர்” அறிஞர்களின் சிந்தனையை தூண்ட வல்ல இந்நூல் தனித்துவமான சிந்தனை வளம்மிக்கது.

Sharing is caring!

Add your review

12345